என் கதையை திருடி படம் எடுப்பதா..? பிரபல சினிமா இயக்குனர் மீது எழுத்தாளர் பரபரப்பு புகார்!
சென்னை: தனது கதையை திருடி படம் எடுப்பதாக பிரபல இயக்குனர் மீது எழுத்தாளர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கொரோனா பிரச்னை எப்போது தீரும் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று காத்திருக்கிறார்கள், மக்கள்.
சினிமா துறையினரும் அதே கவலையில் உள்ளனர். பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள பல படங்கள், ஷூட்டிங்கிற்கு காத்திருக்கின்றன.

பூஜா ஹெக்டே
இந்நிலையில் தனது கதையை திருடி படம் எடுப்பதாக பிரபல ஹீரோ மற்றும் இயக்குனர் மீது எழுத்தாளர் ஒருவர் புகார் கூறியிருக்கிறார். பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், அலா வைகுந்தபுரம்லோ. பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி உட்பட பலர் நடித்திருந்தனர்.

புட்ட பொம்மா
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இதில் இடம்பெற்றுள்ள, புட்ட பொம்மா என்ற பாடல் யுடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

எழுத்தாளர் புகார்
அதிக எதிர்பார்ப்புக்குள்ள இந்தப் படம் பற்றி தினமும் ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருந்தன. அதன்படி, இந்தப் படத்தின் 6 நிமிட சேஸிங் காட்சிக்காக படக்குழு 6 கோடி ரூபாயை செலவழிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தனது செம்மரம் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர் வெம்பள்ளி கங்காதர் புகார் கூறியுள்ளார்.

கதைகள் காப்பி
தனது, தமிழ் கூலிகள் மற்றும் செம்மரம் ஆகிய இரண்டு கதைகளில் இருந்தும் எடுக்கப்பட்டு அதை ஒரே கதையாக்கி படமாக எடுக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். எழுத்தாளர்களின் கதைகளை காப்பி அடித்தும் கதைகளின் பாதிப்பிலும் படங்களை எடுக்கும் சினிமா துறையினர் அதற்கான கிரெடிட்டை கொடுக்க மறுக்கின்றனர் என்றும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா
கடந்த சில நாட்களுக்கு முன் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படம் தனது கதையை தழுவி எடுக்கப்படுவதாக ராஜேஷ் மந்தூரி என்ற எழுத்தாளர் புகார் கூறிய நிலையில் இந்த புகாரும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் கதை திருட்டு என்பது புதிதில்லை. தமிழ் சினிமாவிலும் பல படங்களுக்கு இதே பஞ்சாயத்து நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











