இந்தி டப்பிங்கிலும் வசூல் சாதனை... அதிரி புதிரி வசூலை எட்டிய புஷ்பா
மும்பை : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது.
இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், படம் தற்போது அதிரி புதிரி வசூலை எட்டியுள்ளது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியான படம் புஷ்பா. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என வெளியானது.

மரக்கடத்தல் குறித்த படம்
மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாதத்தில் இரண்டாவது பாகத்தின் வேலைகள் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷ்ஷான அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுனின் முந்தைய படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தன. முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலு படமும் அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது. அந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான அல்லு அர்ஜுனை பார்க்க முடிந்தது.

மிரட்டலான கேரக்டர்
ஆனால் புஷ்பா படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டைலான அவரை காட்டில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாகவும் கேங்ஸ்டராகவும் பார்க்க முடிகிறது. இந்தப் படம் அவரை வித்தியாசமாக காட்டியது.

இந்தியில் அதிரிபுதிரி வெற்றி
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியில் இந்தப் படம் அதிரி புதிரி வெற்றியை பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே இந்தப் படம் இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

இந்தியில் ரூ.100 கோடி வசூல்
இந்நிலையில் இந்தப் படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை இந்தியில் படைத்துள்ளது. இந்தியில் இதுவரை டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தென்னிந்திய மொழிப் படங்களில் பாகுபலி, பாகுபலி 2, சாஹோ, 2.O ஆகிய படங்களே இந்தியில் இத்தகைய 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன.

ஒரே வாரத்தில் ரூ.2 கோடி வசூல்
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த வாரத்தில் மட்டுமே புஷ்பா படம் கூடுதலாக 2 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் முதல் இரண்டு நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











