மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐதராபாத் : டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் கிறிஸ்துமசை முன்னிட்டு டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுன்
டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப்படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

லாரி டிரைவராக அல்லு அர்ஜுன்
செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சுகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் மரங்களை கடத்துபவராகவும் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு வில்லனாகியுள்ளார் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில்.

5 மொழிகளில் ரிலீஸ்
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இவர் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில் தற்போது படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் டிசம்பர் 17ம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்
இதேபோல படத்தின் ஓடு ஓடு ஆடு... புஷ்பா என்ற பாடலும் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாக்லேட் பாயாக கடந்த படங்களில் நடித்திருந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தின் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











