மிகுந்த எதிர்பார்ப்பில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்... தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ரிலீஸ்!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.
மரக் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் தமிழகத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் இரண்டு பாகங்களாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் இந்த படத்தின் முதல் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வரும் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மிரட்டலான டீசர், ட்ரெய்லர்
மரக் கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ள நிலையில் படத்தின் டீஸர், டிரைலர் உள்ளிட்டவை மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் தன்னுடைய கெட்டப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு சிறப்பாக காணப்படுகிறார்.

மிரட்டலான வில்லன்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர் தேவிஸ்ரீபிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

சமந்தா பாடலுக்கு நடனம்
ரங்கஸ்தலம் என்ற படத்தை இயக்கி நல்ல பெயரைப் பெற்றுள்ள இயக்குனர் சுகுமார் இந்த படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது என்ட்ரியை சினிமாவில் மீண்டும் துவங்கியுள்ளார் சமந்தா.

வித்தியாசமான கெட்டப்
அலா வைகுந்தபுரமுலோ என்ற படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அடுத்து இந்த படத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால் தன்னுடைய கெட்டப்பை மிகவும் வித்தியாசமாக லாரி டிரைவராக அவர் மாற்றியுள்ளார். கதைக்கு தேவையான அளவில் தனது கெட்டப் சேஞ்ச்சை அவர் செய்துள்ளார்.

ஐந்து மொழிகளில் ரிலீஸ்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வரும் 17ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழில் இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











