புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய லைகா

சென்னை : சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா கைப்பற்றியுள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. இந்தப் படம் அடுத்த மாதம் 17ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா

நாயகியாக ராஷ்மிகா மந்தனா

படத்தில் அல்லு அர்ஜுனுடன் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர்கள் வித்தியாசமான வகையில் அமைந்துள்ளன. மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் பாகம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்தடுத்த பாடல்கள்

அடுத்தடுத்த பாடல்கள்

படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் லிரிக் வீடியோக்களாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 17ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கம்

சுகுமார் இயக்கம்

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வெளியான ரங்கஸ்தலம் படம் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து தற்போது புஷ்பா படத்திற்கும் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு காணப்படுகிறது. அதற்கேற்றாற் போல படத்தின் பாடல்களும் சிறப்பான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழில் வெளியான சாமி சாமி பாடல் 1 கோடி வியூஸ்களை பெற்றுள்ளது.

தமிழக வெளியீட்டு உரிமை

தமிழக வெளியீட்டு உரிமை

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது கைப்பற்றியுள்ளது. இதற்கென பெரும் தொகை கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது- இந்த தகவலை புஷ்பா படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X