ரஷ்யாவில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா.. மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது புஷ்பா படம்.

சிவப்பு சந்தன மரக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை ஈட்டியது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பான வகையில் உருவாகி வருகிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது புஷ்பா. மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் லாரி ஓட்டுநராக இருந்து மரக்கடத்தலில் ஈடுபடுபவராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவிஸ்ரீ பிரசாத் இசை

படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சமந்தா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஊ சொல்றியா என்ற அந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. இந்தப் பாடலுக்கு முன்னதாக தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை சமந்தா வெளியிட்ட நிலையில், இந்தப் பாடல் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

ரஷ்யாவில் வெளியாகும் புஷ்பா

ரஷ்யாவில் வெளியாகும் புஷ்பா

இந்தப் படத்தில் தன்னுடைய வழக்கமான லுக்கில் இருந்து மாறுபட்டு நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இந்தப் படம் பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியானது. இதனிடையே, சர்வதேச அளவில் படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது ரஷ்யாவிலும் அந்த மொழியில் டப் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 8ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

ரஷ்ய மொழியில் வெளியான ட்ரெயிலர்

ரஷ்ய மொழியில் வெளியான ட்ரெயிலர்

சிறப்பு காட்சிகளாக டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும் டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை ரஷ்ய மொழியில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்திய மொழிகளில் வரவேற்பை பெற்று அதிகமான வசூலையும் பெற்றுள்ள புஷ்பா படம் தொடர்ந்து ரஷ்யாவில் வெளியாகவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்பான சூட்டிங்கில் 2வது பாகம்

விறுவிறுப்பான சூட்டிங்கில் 2வது பாகம்

இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் சூட்டிங் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய நிலையில், இரண்டாவது பாகத்தில் தமன்னா ஆடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக இயக்க சுகுமார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X