வந்துடுச்சு... புஷ்பா ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா
ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்
பெரும் எதிர்பார்ப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள புஷ்பா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சென்சேஷனல் ஹிட்டடித்து
நடிகர் அல்லு அர்ஜுன் இப்பொழுது பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். அதனால் இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறுவதால் பல மொழிகளிலும் இவரது திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அந்த வகையில் கடைசியாக வெளியான அலா வைகுண்டபுரம்லோ சென்சேஷனல் ஹிட்டடித்து சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது

முரட்டுத்தனமான கெட்டப்பில்
அலா வைகுண்டபுரம்லோ வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் சந்தனக்கடத்தலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. முற்றிலும் வித்தியாசமான முரட்டுத்தனமான கெட்டப்பில் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு புஷ்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மித்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் புஷ்பராஜ் எனவும் லாரி டிரைவராக நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மொட்டை அடித்துக்கொண்டு
ரங்கஸ்தலம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதால் இந்திய அளவில் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார்.

டிசம்பர் 6 ட்ரெய்லர்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். புஷ்பா படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ஏற்கனவே பட்டையை கிளப்பியது இந்த நிலையில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா ட்ரெய்லர் ரிலீஸ் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி புஷ்பா ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











