பாகுபலி ரூட்டை பின்பற்றும் அல்லு அர்ஜுன்.. இரண்டு பாகங்களாக வந்து மிரட்டப் போகும் புஷ்பா!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரங்கஸ்த்தலம் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகி வருகிறது.

வைகுண்டபுரம் ஹிட்

வைகுண்டபுரம் ஹிட்

இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வைகுண்டபுரம் என தமிழிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

புஷ்பராஜ்

புஷ்பராஜ்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தில் செம்மரக் கட்டைகளுடன் நடிகர் அல்லு அர்ஜுன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வெளியான இன்ட்ரோ டீசர்களும் வைரலாகின.

மிரட்டல் வில்லன்

மிரட்டல் வில்லன்

புஷ்பா படத்தில் விஜய்சேதுபதி அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜோஜி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி ரூட்

பாகுபலி ரூட்

டோலிவுட்டில் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி ஹிட்டான நிலையில், தற்போது புஷ்பா திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகப் போவதாக அசத்தல் அப்டேட் வெளியாகி அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ரம்ஜான் ட்ரீட் கொடுத்துள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே 2ம் பாகம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதிகளில் மாற்றம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X