அல்லு அர்ஜூனின் புஷ்பா…. விரைவில் ஷூட்டிங் ஸ்டார்ட் !

ஹைதராபாத் : அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5 தேதி முதல் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

அலா வைகுந்தபுரம் லோ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். செம்மரம் கடத்தலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் லாரி ஓட்டுனநராக அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார்.

இசை

இசை

இப்படத்தை பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில், புஷ்பா படக்குழுவினர் வெளியிட்ட வீடியோவில், புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜுனின் அறிமுக சண்டைக்காட்சிகளும் மிக பிரம்மாண்டமாக காட்சியமைக்கப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் பாசில் வில்லானாக நடிக்கிறார். மேலும், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனுசுயா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

இந்நிலையில் ஜூலை 5ந் தேதி முதல் புஷ்பா திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஜூலை மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்றும், படத்தின் பிந்தைய வேலைகள் இருப்பதால் படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

ரூ250 கோடி செலவில்

ரூ250 கோடி செலவில்

மேலும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது முதல் பாகத்தின் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படுவதாகவும் இரண்டாம் பாகம் பிறகு படமாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X