புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் இன்ட்ரோ பாடல்.. எங்க நடக்குது தெரியுமா?

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் புஷ்பா.

சுகுமார் இயக்கத்தில் இந்தப் படம் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் மிரட்டியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன மரக்கடத்தலில் ஈடுபடுவார். லாரி டிரைவராக இருந்து டானாக மாறுவதாக கதைக்களம் அமைந்திருந்தது.

ரசிகர்களை கவர்ந்த புஷ்பா படம்

ரசிகர்களை கவர்ந்த புஷ்பா படம்

சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குநர் சுகுமார். படத்தின் பாடல்களும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் மிகச்சிறப்பாக அமைந்தது. அனைத்து பாடல்களும் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம்

புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம்

இந்தப் படத்தின் இறுதியிலேயே படத்தின் இரண்டாவது பாகத்திற்கான லிங்க் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர்.

ஒரு பாடலுக்கு ஆடும் தமன்னா?

ஒரு பாடலுக்கு ஆடும் தமன்னா?

இந்தப் படத்திலும் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவே இணைந்துள்ளார். மேலும் பகத் பாசில் படத்தில் வில்லனாக மிரட்டவுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் 10 மொழிகளில் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், தற்போது தமன்னா ஒரு பாடலுக்கு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுன் இன்ட்ரோ பாடல்

அல்லு அர்ஜுன் இன்ட்ரோ பாடல்

இந்நிலையில், தற்போது படத்தில் அல்லு அர்ஜுனின் இன்ட்ரோ பாடல் விசாகப்பட்டினத்தில் பீச் மற்றும் போர்ட் செட்டப்பில் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரு தினங்களுக்கு இந்த சூட்டிங் தொடரும் என்றும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பில் புஷ்பா 2

எதிர்பார்ப்பில் புஷ்பா 2

தெலுங்கில் ஸ்டைலிஷ்ஷான ஹீரோவாக அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் கரடு முரடான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவும் கிராமத்து கேரக்டரில் ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X