கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில் அல்லு அர்ஜுன்.. 'புஷ்பா' ரிலீஸ் தேதி கெத்தாக அறிவிப்பு!
சென்னை: கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில், அல்லு அர்ஜுன் இருக்கும் புகைப்படத்துடன் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு ஹீரோ, அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், 'புஷ்பா'. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது
சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின்.

வன அதிகாரி
தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகினார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

செம்மரக் கடத்தல்
இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இதன் ஷூட்டிங், மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை படக்குழு உறுதி செய்யவில்லை.

மூன்று வில்லன்கள்
இந்தப் படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும் கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாக நடிக்கிறார் என்றும் தெலுங்கு காமெடி நடிகர் சுனில் மற்றொரு வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதை நடிகர் அல்லு அர்ஜுன், தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரபூர்வமாக இன்று காலை அறிவித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள புதிய ஸ்டில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஹேஷ்டேக்ஸ்
அதில், நடிகர் அல்லு அர்ஜுன், முரட்டு லுக்கில் கையில் கோடாரியுடன் காட்டுக்குள் அமர்ந்திருக்கிறார். அருகில் மரம் வெட்ட வந்தவர்கள் அவரைப் பார்த்தபடி நிற்கின்றனர். இதையடுத்து. #AlluArjun, #pushpa ஆகிய ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











