செம்மரக் கடத்தல் டான்.. வித்தியாசமான ஆக்டிங்கில் மிரட்டும் அல்லு அர்ஜுன்.. தெறிக்கவிடும் டிரைலர்!
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் போல செம்மரக் கடத்தல் டானாக புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி யூட்யூப் டாப் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி உள்ளது.
முதல் பாகம் வரும் டிசம்பர் 17ம் தேதி திரைக்கு வருகிறது.

புஷ்பா எனும் புஷ்பராஜ்
புஷ்பா என்றதும் என்ன பெண் பெயராக இருக்கிறதே என நினைத்த ரசிகர்களுக்கு புஷபா எனும் புஷ்பராஜ் என தெளிவாக தனது பெயர் விளக்கத்தை நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்துள்ளார். ஆந்திராவில் அதிகம் நடைபெறும் செம்மரக் கடத்தல் மாஃபியா பற்றிய கதையாக இந்த படம் உருவாகி உள்ளது.

ஃபிளவர் இல்லை ஃபயர்
புஷ்பா என்றதும் ஃபிளவருன்னு நினைச்சிட்டீங்களா.. நான் ஃபிளவர் இல்லை ஃபயரு என அல்லு அர்ஜுன் பேசும் வசனம் வேற லெவல் வெறித்தனமாக உள்ளது. நேற்று மாலை வெளியான புஷ்பா திரைப்பட டிரைலர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என 4 மொழி யூடியூப் தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

ரகளை செய்யும் ராஷ்மிகா
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஓவர் கவர்ச்சியாக ஸ்ரீவள்ளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலரில் தாவணியை கழட்டி, குளித்து முடித்தவுடன் தோழிகளுடன் பாவடை கட்டிக் கொண்டே பைக் ஓட்டுவது, அல்லு அர்ஜுன் உடன் ரொமான்ஸ் என ரகளை செய்துள்ளார்.

மிரட்டல் மொட்டை
புஷ்பா படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிய நிலையில், அந்த ரோலில் நடிக்க ஒப்புக் கொண்ட மலையாள நடிகர் பகத் ஃபாசில் மொட்டை தலையுடன் மிரட்டி எடுத்துள்ளார். பார்ட்டி எப்போ புஷ்பா என டிரைலரின் இறுதியில் அவர் கேட்க, சமந்தா நடனம் ஆடப் போகும் செட்டை காண்பித்து டிரைலர் முடிகிறது.
பாஸ் கோச்சிப்பாரு
பொதுவாக டான் படங்களில் வேலைகளை அடியாட்களை வைத்தே செய்து ஒரு பெருங்கூட்டத்தில் தலைவனாக தனியாக தெரியும் கதாபாத்திரமாக இல்லாமல் புஷ்பராஜ் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக களத்தில் இறங்கி கடத்தல் வேலைகளை செய்பவராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். போலீஸ்காரங்க பிடித்து அடித்து தோலுரித்து உங்க பாஸ் யாருன்னு கேட்க, சொன்னா பாஸ் கோச்சிப்பாரு என அல்லு அர்ஜுனே சொல்லும் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு எழுந்துள்ளது. டிசம்பர் இறுதியில் ஒரு சூப்பர் ஹிட் பான் இந்திய படம் லோடிங் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











