ஆயிரம் கோடியெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. புஷ்பா 2 மாஸ் கலெக்ஷனைப் பார்த்து அல்லு அர்ஜுன் பேச்சு!
மும்பை: ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் கடந்த ஒரு வாரமாகவே அல்லு அர்ஜுன் குறித்த பேச்சுகள்தான் அதிகம். காரணம் அவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்துக் கொண்டு உள்ளது. படம் 6 நாளில் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்திய சினிமா உலகில் ஒரு படம் 6 நாளில் ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையைப் படைத்தது. படத்தின் வெற்றி விழா மும்பையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புஷ்பா 2 படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது படம் வெளியாகி நேற்றுடன் 8 நாட்கள் ஆகின்றது. இந்த 8 நாளில் படம் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் ரூபாய் 1,100 கோடிகளை வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் என பலர் நடித்துள்ளனர். படம் கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் உலகம் முழுவதும் படத்தினைப் பாராட்டினார்கள்.

படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இருந்தபோதும், படத்தின் அட்டகாசமான திரைக்கதையால் ரசிகர்கள் படத்தினைப் பாராட்டினார்கள். படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது. படத்தினைத் தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தினை ஈட்டித் தந்துள்ளது. படத்திற்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் வசூலில் வட இந்தியாவில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு உள்ளது.
புஷ்பா 2: இப்படியான நிலையில் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபல திரையரங்க உரிமையளர்கள் ஒருவாரமாகவே படத்திற்கு நல்ல வசூல். மேலும் திரையிடப்பட்ட அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு உள்ளது எனக் கூறினார்கள். மேலும் படம் முதல் வாரத்திலேயே தங்களுக்கு லாபத்தினை ஈட்டித் தரும் படமாக மாறிவிட்டதாகவும், வரும் காலங்களிலும் படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் எனவும் கூறினர்.
ஆயிரம் கோடி: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் பேசுகையில், “ இந்த ஆயிரம் கோடி வசூல் எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான். இதுபோன்ற நம்பர்கள் தற்காலிகமானதுதான். ஆனால் இந்த நம்பர்களை உருவாக்கிய ரசிகர்களின் அன்புதான் நிரந்தரமானது. புஷ்பா 2 படத்தின் 1000 கோடிகள் ரூபாய் வசூலை கூடிய விரைவில் மற்றொரு படம் முறியடிக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. அதுதான் திரையுலகிற்கு வேண்டும் எனக் கூறினார்.
தன்மை: இவரது பேச்சு, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, தனது ரசிகர்களின் அன்பினால்தான் தான் வளர்ந்துள்ளதும், தனது படங்கள் இந்திய அளவில் மாபெரும் சாதனை படைக்கும் படங்களாக இருக்கின்றது என்பதை உணர்ந்து மிகவும் தன்மையாக பேசியுள்ளார். மேலும் படத்தின் ப்ரோமோசனின்போதும் அல்லு அர்ஜுன் மிகவும் தன்மையாகவே பேசினார். இந்த குணம் மற்ற நடிகர்களுக்கும் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











