ரஷ்ய சர்வதேச திரைப்பட விழாவில் புஷ்பா: ஹாலிவுட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்

மாஸ்கோ: தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், புஷ்பா படத்திற்கு சர்வதேச அளவில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மிரட்டிய புஷ்பாகாரு

மிரட்டிய புஷ்பாகாரு

டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்சன் ஜானரில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா அதிரிபுதிரி ஹிட் அடித்தது. செம்மரக் கடத்தலை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த புஷ்பா, சுமார் 400 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது.

புஷ்பா இரண்டாம் பாகம்

புஷ்பா இரண்டாம் பாகம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த புஷ்பா படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தாறுமாறாக ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து 'புஷ்பா' படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதல் பாகத்தில் இணைந்த அதே கூட்டணி தான் புஷ்பா 2ம் பாகத்திலும் களமிறங்கியுள்ளது. இந்தப் பாகத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் இருவருக்குமான ஆக்சன் காட்சிகள் தூள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்கோ திரைப்பட விழா

மாஸ்கோ திரைப்பட விழா

புஷ்பா வெளியாகி 8 மாதங்கள் ஆனாலும், தொடர்ந்து ரசிகர்களின் ஹாட் டாக்கில் இந்தப் படம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில், புஷ்பா திரைப்படம் திரையிடப்படுகிறது. 'மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா'-வில் இந்தியாவில் இருந்து புஷ்பா படம் மட்டுமே திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், புஷ்பா படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் எனக் கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் அறிமுகம்

ஹாலிவுட்டில் அறிமுகம்

இதனிடையே புஷ்பா ஹீரோ அல்லு அருஜுன், ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஒருவரை அல்லு அர்ஜுன் சந்தித்ததாகவும், அவர் இயக்கும் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் முன்னணி நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் வெளியான 'தி கிரே மேன்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X