அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது.. ஆனால், திங்கட்கிழமை வரை சிறையில் தான் இருக்கணுமாம்?
ஹைதராபாத்: வடைபோச்சே என்கிற கணக்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கிடைத்தும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனை காலையில் பெட்ரூம் வரை வந்து போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். வெள்ளிக்கிழமையான இன்று கைது செய்தால் 2 நாட்களாவது சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்கிற நோக்கத்திலேயே இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனக்கும் இந்த கைதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல யாருடைய தலையீடும் இல்லை என பேசியுள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அல்லு அர்ஜுன் சஞ்சலக்குடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1100 கோடி வசூல்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலை அந்த படம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் வெற்றி விழாவில் நேற்று அல்லு அர்ஜுன் கலந்துக் கொண்ட நிலையில், இன்று அந்த சந்தோஷமே மொத்தமாக போனது போல அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 27 வரை அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறுகின்றனர்.

ஜாமின் வழங்கிய தெலங்கானா உயர்நீதிமன்றம்: குற்றவியல் நீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்த நிலையில், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பு தொடர்ந்த இடைக்கால ஜாமின் கோரிய வழக்கில் அல்லு அர்ஜுன் மீது தவறில்லை என்றும் அவருக்கு ஜாமின் வழங்கலாம் என உயர்நீதிமன்றம் 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், அதை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்பித்து அல்லு அர்ஜுனை வெளியே எடுக்க வேண்டும் என்றால் கூட திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும் 3 நாட்கள் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சி: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி எனும் 39 வயது பெண் உயிரிழந்தது எதிர்பாராத சம்பவம் என்றும் அதற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். நடிகர்கள் நானி, வருண் தவான், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











