நான் சூப்பரா இருக்கேன்... எனக்காக பிரார்த்தனை செஞ்சதுக்கு நன்றி... தலைவணங்கிய ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார்

கோதாவரி : கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அவர் தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களிடம் சிறப்பான இடம்

ரசிகர்களிடம் சிறப்பான இடம்

கடந்த 2003ல் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பான படங்களை அளித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தவர் டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜூன். இவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறி வருகிறது.

வீட்டில் தனிமைப்படுத்திய அர்ஜூன்

வீட்டில் தனிமைப்படுத்திய அர்ஜூன்

தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அல்லு அர்ஜூன். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னுடைய வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தார். பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்திய அவர், தன்னுடைய உடல்நலம் குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் 15 நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகு தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறைப் படத்தப்பட்டுள்ள லாக்டவுன் கொரோனா பரவலை குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X