புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி... குடும்பத்திற்கு ஆறுதல்... ரசிகர்களை கவர்ந்த புஷ்பா நாயகன்
பெங்களூரு : நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
ஆனால் அவரது செயல் தற்போது ரசிகர்களின் மனதை வெற்றிக் கண்டுள்ளது.
சமீபத்தில் மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு அல்லு அர்ஜுன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் தன்னுடைய லுக்கையும் ஸ்டைலையும் மாற்றி சிறப்பான நடிப்பை அளித்திருந்தார் அல்லு அர்ஜுன். இந்தப் படம் ரசிகர்களின் மனதை வெற்றி கொண்டுள்ளது.

சூப்பர் டூப்பர் வெற்றி
படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. தொடர்ந்து வசூல்மழையை பொழிந்து வருகிறது. இதன்மூலம் இந்திய அளவில் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

இரண்டாவது பாகம்
தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட உள்ள நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பகத் பாசிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இதயங்களை கவர்ந்த அல்லு அர்ஜுன்
இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள அல்லு அர்ஜுன் தற்போது அவர்களது இதயங்களையும் தொட்டுள்ளார். கடந்த அக்டோபரில் மாரடைப்பால் மறைந்த புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நேரில் அஞ்சலி
மேலும் புனீத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தனது மரியாதையையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புனீத்தின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரிலும் பதிவு
மேலும் புனீத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தனது மரியாதையையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புனீத்தின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுத தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











