Allu Arjun: சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன்.. நிம்மதி பெருமூச்சு விடும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: தெலங்கானா உயர்நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று மாலை ஜாமின் வழங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிறை அதிகாரிகளிடம் ஜாமின் குறித்த பேப்பர்கள் சென்று சேர்ந்த நிலையில், அவர் சிறையில் இருந்து வெளியேறியுள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தியா தியேட்டரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.

allu arjun allu arjun arrest allu arjun jail

வீட்டின் பெட்ரூமுக்கே சென்று போலீஸார் அல்லு அர்ஜுனை கைது செய்தனர் என்றும் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என அவர் சொல்லிவிட்டு போலீஸ் வாகனத்தில் கைதாகி வந்தது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

ஒரு நாள் இரவு சிறையில்: நாம்பலி குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என சிறையில் அடைக்க உத்தரவு போடப்பட்டது. அதன் காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று ஒரு நாள் இரவு முழுவதும் சிறைவாசத்தை அனுபவித்தார். தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கிய நிலையில், அவர் இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

50 ஆயிரம் ரூபாய் ஜாமின்: 39 வயது மதிக்கத்தக்க ரேவதி எனும் பெண் கூட்ட நெரிசலில் உயிரிழக்க அல்லு அர்ஜுன் ஒரு முக்கிய காரணம் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு செல்லவுள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பாண்ட் செலுத்தி அவருக்கான ஜாமின் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் நிம்மதி: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய உடனே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில், ஒரு நாள் முழுக்க சிறையில் அவர் அடைந்துக் கிடக்கவேண்டும் என்பது ரசிகர்களை அப்செட் ஆக்கியது. இந்நிலையில், அவர் வெளியேறியுள்ளார் என்கிற தகவல் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. மனைவியின் மரணத்தால் பாதிக்கப்பட்ட பாஸ்கர் வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு சுலபமாக முடிவுக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X