அப்பாவை பார்த்ததுமே துள்ளி குதித்து தாவிய மகன்.. அல்லு அர்ஜுன் மனைவி கட்டிப்பிடித்து முத்த மழை!
சென்னை: சிறையில் ஒரு இரவை கழித்துவிட்டு ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்த அல்லு அர்ஜுன் தனது வீட்டுக்கு சென்ற நிலையில், அவருக்காக வாசலிலேயே ஒட்டுமொத்த குடும்பமும் காத்துக்கிடந்தது. அப்பா அல்லு அர்ஜுனை பார்த்ததுமே மகன் அயான் ஓடி வந்து அப்பாவின் மீது ஏறிக் கொண்ட காட்சி ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் கைதான நிலையில், காவல் நிலையத்துக்கு செல்வதற்கு முன்னதாக தனது மனைவி சினேகா ரெட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகள் நேற்று ரசிகர்களை நெகிழச் செய்தன. இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், அவரை பார்த்ததுமே மனைவி சினேகா ரெட்டி கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

தனது மகள் அல்லு அர்ஹாவையும் தூக்கி அல்லு அர்ஜுன் கொஞ்ச அல்லு அர்ஜுனின் மகள் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தா காட்சிகள் ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளன.
வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் சஞ்சலகுடா சிறையில் நேற்று அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் உணவு ஏதும் சாப்பிட மறுத்தார் என்றும் இரவு முழுவதும் வெறும் தரையிலேயே படுத்துக் கொண்டு உறங்காமல் சோகத்தில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. காலையில், சிறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் கிடைத்த நிலையில், அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்பாவை பார்த்ததும் ஹேப்பியான குழந்தைகள்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அயான் என்கிற மகனும் அரா என்கிற மகளும் உள்ளனர். இரவு முழுவதும் அப்பா சிறையில் இருந்ததால் அப்பாவை பார்க்க வேண்டும் என தவித்துக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் அப்பா ஜாமினில் வந்த நிலையில், அவரை பார்த்ததும் ஹேப்பியாகி விட்டனர். அயான் அப்பா மீது ஏறிக் கொண்ட நிலையில், அதன் பின்னர் மகளை தூக்கி கொஞ்சி அவரை சமாதானப்படுத்தினார் அல்லு அர்ஜுன்.
மனைவி முத்த மழை: அல்லு அர்ஜுன் சிறைக்குச் சென்று திரும்பிய நிலையில், தனது கணவரை பார்த்ததும் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்துவிட்டார் சினேகா ரெட்டி. ரொம்ப நேரம் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகா ரெட்டியின் குடும்பத்தினர் என பலரும் அல்லு அர்ஜுனை பார்த்து சந்தோஷமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











