அந்தரத்தில் தொங்கி யோகா செய்யும் அல்லு அர்ஜுன் மனைவி… வைரலாகும் புகைப்படம் !
சென்னை : தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். தெலுங்கு திரைத்துறையில் மட்டுமின்றி தமிழகத்திலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் இறுதியாக நடித்த அல வைகுண்டபுரமுலு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த வெற்றிப்பெற்ற பாடலாக உள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அல்லுஅர்ஜூன் புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் மனைவி, ஸ்நேகா ரெட்டி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார். யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தழைகீழாக தொங்கியபடி யோகா செய்துள்ளார். இந்த புகைப்படத்தை இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக உலகை தழைகீழாக பார்ப்பது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அனைவரின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

Recommended Video
சமீபத்தில் இதேபோல சமந்தா அந்தரத்தில் தொங்கிய புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதேபோல சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











