ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் புஷ்பா ஹீரோ... ஜவான் படத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா..?
மும்பை: பாலிவுட் சூப்பர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது.
சித்தார்த் ஆனாந்த் இயக்கத்தில் ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக வெளியான பதான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், டோலிவுட் ஹீரோவும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வேகமெடுக்கும் ஜவான் ஷூட்டிங்
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பதான் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இதுவரை ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாய்காட் பதான் பிரசாரங்களையெல்லாம் விரட்டியடித்த ஷாருக்கான், தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவரது நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி வருகிறது. அட்லீ இயக்கி வரும் ஜவான் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜவானில் இணையும் டோலிவுட் பிரபலம்
ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, கேமியோ ரோலில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். ஜவான் மூலம் முதன்முறையாக ஷாருக்கான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், தளபதி விஜய் கெஸ்ட் அப்பிரியன்ஸ் கொடுக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், டோலிவுட் பிரபலம் ஒருவர் ஜவான் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அபிஸியல் அப்டேட்
அதன்படி, ஜவான் படத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தெலுங்கில் முன்னணி நடிகராக கலக்கி வரும் அல்லு அர்ஜுன், 2021 இறுதியில் வெளியான புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டினார். இந்தப் படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான், ஜவான் படத்திற்காக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளாராம் அட்லீ.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் அட்லீ
ஷாருக்கான், விஜய் சேதுபதிக்கு இணையான ஒரு கேரக்டரில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்துள்ளாராம். இந்த கேரக்டரில் முன்னணி ஹீரோ ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், அல்லு அர்ஜுனை அவர் டிக் செய்துள்ளாராம். அல்லு அர்ஜுனும் இந்த ஆஃபருக்கு ஓக்கே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தீயாக பரவி வருவதை அடுத்து, ட்விட்டரில் அட்லீ, அல்லு அர்ஜுன், ஜவான் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த தகவல் உறுதியானால் பதான் போல ஜவானும் ஆக்ஷன் ட்ரீட்டாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











