புது கெட்டப்பில் அல்லு அர்ஜுன்.. புஷ்பா கெட்டப்பைவிட இது மிரட்டுதே.. மிரண்டுப் போன ராஷ்மிகா!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
இவரது சமீபத்திய படம் புஷ்பா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வசூல்மழையும் பொழிந்தது.
சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த சிறப்பான படங்களால் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது அடுத்த வெற்றிப்படங்களால் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். அலா வைகுந்தபுரமுலு படத்தில் ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்திய இவர். கேரக்டரால் தனக்கு மிரட்டவும் தெரியும் என்பதை புஷ்பா படத்தின் மூலம் நிரூபித்தார்.

புஷ்பா படம்
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது புஷ்பா. புஷ்பான்னா ப்ளவர்னு நினைச்சியா, பயருடான்னு இவர் பேசிய வசனங்கள் ரசிகர்களை வேற லெவலில் கவர்ந்தது. படம் திரைக்கதையில் மட்டுமில்லாமல் வசூலிலும் அனைவரையும் மிரட்டியது.

புஷ்பா 2 படத்தின் சூட்டிங்
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காட்சிகளிலும் இவர்களது கேரக்டர் சிறப்பாக வெளிப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்டில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான திரைக்கதை
முதல் பாகத்தை காட்டிலும் இந்த இரண்டாவது பாகம் மிரட்டும் என்றும் அதற்கேற்ப திரைக்கதையை மாற்றி அமைத்து வருவதாகவும் சுகுமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் சுகுமார் குறித்து பேசிய பகத் பாசில், இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்திற்கும் சுகுமாரிடம் கதை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

மிரட்டலான புது லுக்
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தற்போது விளம்பரப் படம் ஒன்றிற்காக தன்னுடைய கெட்டப்பை வெகு சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளார். கூலர்ஸ், சிகரெட், காதில் கடுக்கன் சகிதம் மிகவும் கரடுமுரடான இந்தத் தோற்றம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மிரண்ட ராஷ்மிகா
ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர். பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லு அர்ஜுனின் இந்தக் கெட்டப் திரையுலகினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த ராஷ்மிகாவும் இந்தப் புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் ரசிகர்கள்
புகைப்படத்தை பார்த்தவுடன் அது அல்லு அர்ஜுன் என்று ஒரு வினாடி கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இருவரும் இணைந்து நடித்து புஷ்பா படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இவர்களின் கெமிஸ்ட்ரியை புஷ்பா 2 படத்திலும் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











