Pushpa 2 Box Office: 449 கோடியா?.. 2 நாட்களில் விஜய்யின் கோட் வசூல் காலி.. அல்லு அர்ஜுன் தாண்டவம்!
சென்னை: இந்திய சினிமாவில் மற்ற எந்த நடிகர்களும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் அல்லு அர்ஜுன். 2 நாட்களிலேயே தளபதி விஜய்யின் கோட் பட வசூலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார் அல்லு அர்ஜுன். அடுத்த ஸ்டாப் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் வசூலுக்குத்தான் பாதிப்பு என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கெத்துக்காட்டி வருகின்றனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மொத்த வசூலையே புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறுகின்றனர்.

ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பினாலும் சூர்யாவின் கங்குவா படத்தை போல புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்காமல் ரூல் செய்து வரக் காரணமே அல்லு அர்ஜுனின் ஸ்டார்டம் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
புஷ்பா 2 முதல் நாள் வசூல்: தமிழ்நாட்டில் 11 கோடி வசூலும், இந்தியில் 72 கோடி வசூலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் ஈட்டி முதல் நாளிலேயே புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 294 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். 2வது நாளான வெள்ளிக்கிழமை படத்தின் வசூல் பாதியாக குறைந்து விட்டது என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் குறைத்து சொல்லி வந்த நிலையில், அதெல்லாம் கிடையவே கிடையாது. அல்லு அர்ஜுனின் ருத்ர தாண்டவத்தால் புஷ்பா 2 வசூல் ஸ்லோ டவுன் ஆகவில்லை என 2வது நாள் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

449 கோடி வசூல்: புஷ்பா 2 திரைப்படம் 2வது நாளில் அதிகபட்சம் 390 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 449 கோடி ரூபாய் அதாவது 450 கோடிக்கு ஒரு கோடி கம்மி என புஷ்பா படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆல் ஓவர் இந்தியாவையே ஹார்ட் அட்டாக் வர செய்துள்ளனர். பல பாலிவுட் நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு பல கோடியில் எடுக்கப்பட்டு லைஃப் டைம் வசூல் கூட இவ்வளவு வரவில்லையே பாஸ் என புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லு அர்ஜுன் இந்த சாதனையை அசால்ட்டாக செய்திருக்கிறார்.

கோட் லைஃப் டைம் வசூல் காலி: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்ஷி சவுத்ரி, மோகன் நடித்த கோட் திரைப்படம் 13 நாட்களில் 413 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். கோட் படத்தின் லைஃப் டைம் வசூலே 450 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் 449 கோடி வசூலை வாரிக் குவித்து இமாலய சாதனையை படைத்துள்ளது. சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் மேலும், 400 கோடி வசூல் செய்தால் 800 கோடிக்கும் அதிகமான வசூலை முதல் வாரத்திலேயே புஷ்பா 2 அள்ளிவிடும் என்கின்றனர். அல்லு அர்ஜுனுக்கு தாராளமாக 300 கோடி சம்பளம் கொடுக்கலாம் என்றும் அடுத்த படத்துக்கு அவர் 400 கோடி கேட்டால் கூட ஆச்சர்யமில்லை என்கின்றனர்.



Click it and Unblock the Notifications











