Pushpa 2 First Review: இன்னொரு தேசிய விருது பார்சல்.. அல்லு அர்ஜுன் அதகளம்.. புஷ்பா 2 விமர்சனம்!
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இன்று இரவு 9 மணிக்கு ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி வெளியாகும் என்றும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்குச் சென்று பார்க்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா 2 படத்தின் ட்விட்டர் உள்ளிட்ட விமர்சனங்கள் இன்று நள்ளிரவே வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் முதல் விமர்சனம் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ரூல் படத்தை பார்த்துவிட்டதாகவும் படம் எப்படி இருக்கு, அல்லு அர்ஜுன் நடிப்பு எப்படி இருக்கு என்றெல்லாம் அந்த நபர் விவரமாக அளித்துள்ள முதல் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம்.
புஷ்பா 2 முதல் விமர்சனம்: அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஓடினாலும் ஒரு சீன் கூட போரடிக்கவில்லை என்றும் வைல்ட் ஃபயராகவே படம் இருப்பதாகவும் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
2வது தேசிய விருதை எடுத்து வைங்க: தெலுங்கு சினிமாவில் இதுவரை எந்தவொரு நடிகரும் தேசிய விருதை தட்டிச் செல்லாமல் இருந்து வந்த நிலையில், அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் தேசிய விருதை தட்டித் தூக்கினார். இந்நிலையில், அவருக்கு 2வது தேசிய விருதை புஷ்பா 2 திரைப்படம் நிச்சயம் பெற்றுத் தரும் என்றும் அந்தளவுக்கு மனுஷன் இறங்கி நடித்து மிரள வைத்துள்ளார் என்றும் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.
மெகா பிளாக்பஸ்டர் உறுதி: புஷ்பா 2 படத்தின் இந்தி சென்சாரின் போது படத்தை பார்த்ததாகவும் படம் கண்டிப்பாக மெகா பிளாக்பஸ்டர் அடிக்கும் என்றும் இண்டஸ்ட்ரி ஹிட் உறுதி என்றும் உமைர் சந்து பதிவிட்டுள்ளார். நம்ம ஊர் பயில்வான் ரங்கநாதன் போல இவரும் படம் பார்க்காமலே விமர்சனங்களை கூறி வருகிறார் என்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய அவதூறு கருத்துக்களையும் இவர் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது என்றும் நெட்டிசன்கள் இவரது முதல் விமர்சனத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

300 கோடி முதல் நாள் வசூல்?: புஷ்பா 2 திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இதுவரை 150 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்டியுள்ளதாகவும், இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத பிரம்மாண்ட சாதனையான முதல் நாளே 300 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 ஈட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகபட்சமாக 275 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் வரும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தாலும் அது வொர்த்துதான் என்றும் ஒரே நாளில் தனது சம்பளத்தை அவர் வசூல் செய்துவிடுவார் என்றும் கூறுகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகத்தை விட பல மடங்கு கூஸ்பம்ப்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











