அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!

ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

கமல்ஹாசன் நாயகன் படத்தில் வரதராஜ முதலியார் எனும் கேங்ஸ்டராக நடித்து தேசிய விருது வென்றதை போல செம்மரக் கடத்தல் தொழிலை செய்யும் புஷ்ப ராஜாக நடித்து அல்லு அர்ஜுனும் தேசிய விருது வென்றார்.

Allu Arjun s Pushpa 2 first single will release on Ajith Kumar s birthday

புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வீடியோவை தற்போது அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சுகுமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அல்லு அர்ஜுன் மிரட்ட தேவிஸ்ரீ பிரசாத் இசையில், சாமி சாமி பாடல், ஸ்ரீவள்ளி பாடல், ஓ சொல்றியா என ஒவ்வொரு பாடலும் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஆடவும் பாடவும் வைத்தது. புஷ்பா முதல் பாகத்தை விட 2ம் பாகத்தை 500 கோடி பட்ஜெட்டில் சுகுமார் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான டீசர் 100 மில்லியன் வியூஸ் கடந்த நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளும் பட்டையை கிளப்பும் என தெரிகிறது.

புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ?: புஷ்பா புஷ்பா என மந்திரம் ஜெபிப்பது போல புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதன் ரிலீஸ் அறிவிப்பை தற்போது அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

அஜித் பர்த்டேவுக்கு அல்லு அர்ஜுன் ட்ரீட்: அஜித் பிறந்தநாள் மே 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், மே 1ம் தேதி 11.07 மணிக்கு வெளியாகும் என அல்லு அர்ஜுன் தற்போது அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அட்லீ படம்: புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கினால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் 250 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X