Pushpa 2 movie: யார் செஞ்ச வேலைப்பா இது.. ஸ்ப்ரேவால் நிறுத்தப்பட்ட புஷ்பா 2 படம்!

மும்பை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2 படம். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தற்போது படத்தின் 2வது பாகம் ரிலீஸ் ஆகி பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் மூன்றாவது பாகமும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதன் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் எறு எதிர்பார்க்கலாம்.

allu arjun pushpa 2 movie mumbai

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன் -சுகுமார் காம்பினேஷனில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படம் அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே படத்தின் வாரயிறுதி கலெக்ஷன்களும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் மட்டுமே இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 294 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

மும்பையில் நடந்த சம்பவம்: இந்நிலையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. தமிழ் ரசிகர்களும் புஷ்பா 2 படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதே போல ஸ்ரீலீலா நடனம் முதல் பாகத்தில் ஆடியிருந்த சமந்தா அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்தரா பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ப்ரேவால் நிறுத்தப்பட்ட புஷ்பா 2 படம்: அந்த திரையரங்கில் படத்தின் இடைவேளையை அடுத்து ரசிகர்கள் இரண்டாம் பாதியை பார்ப்பதற்காக அரங்கத்திற்குள் வந்துள்ளனர். அப்போது அங்கு மர்மநபர் ஒருவர் ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளார். இதனால் உள்ளே வந்த ரசிகர்களுக்கு இருமல், தும்மல், மயக்கம், வாந்தி, மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டுள்ளது. விஷயம் அறிந்து அரங்கத்திற்குள் வந்த நிர்வாகிகள் படத்தை நிறுத்திவிட்டு திரையரங்கின் கதவுகளை திறந்து காற்று வரும்படி செய்துள்ளனர். இதையடுத்தே பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் படம் 20 நிமிடங்கள் தாமதமாக மீண்டும் போடப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை: இதனிடையே அங்கு வந்த போலீசார் பார்வையாளர்களிடம் சோதனை மேற்கொண்டனர். ஆயினும் யாரிடமும் ஸ்ப்ரே போன்ற எவற்றையும் கைப்பற்ற முடியாததால் தொடர்ந்து இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை போன்ற பெரிய நகரத்தில் முன்னணி திரையரங்கில் நடந்த இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X