அல்லு அர்ஜுன் நடிப்பு நல்லா இருந்துச்சு.. ஆனா தலைவலிதான் வந்துச்சு.. புஷ்பா 2வை விமர்சித்த ரசிகை!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2. கடந்த 2021ம் ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி 500 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புஷ்பா 2 படம் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புஷ்பா 2 படம் இன்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக அனைவரும் தெரிவித்துள்ளனர். ஆயினும் படம் தலைவலியை கொடுத்ததாகவும் விமர்சித்து வருகின்றனர்.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்த நிலையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள புஷ்பா 2 படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. சுகுமார் இயக்கத்திலேயே உருவாகியுள்ள இந்த படம் 1000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் வசூலே 100 கோடி ரூபாய்களை எட்டியதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கலவையான விமர்சனங்கள்: இந்நிலையில் புஷ்பா 2 படம் இன்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் புக் செய்து திரையரங்குகளில் சென்று ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் படம் தலைவலியையே கொடுத்ததாக படத்தைப் பார்த்த ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார். திரையரங்க வாயிலில் அவரிடம் புஷ்பா 2 படம் குறித்து கேள்வி எழுப்பியபோது, படத்தில் அல்லு அர்ஜுனனின் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் இதே போல கணவன் மனைவியாக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் மிகச் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசும் வேஸ்ட்.. நேரமும் வேஸ்ட்: ஆனால் புஷ்பா 2 படம் மிகப்பெரிய பிளாப்பாக அமையும் என்றும் கொடுத்த காசும் வேஸ்ட் அதேபோல நேரமும் வேஸ்ட் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு மதிப்பெண்ணாக பத்திற்கு ஜீரோ தான் கொடுப்பேன் என்றும் அவர் கூறியது மற்றவர்களுக்கு ஷாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளது. படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியும் மற்ற காட்சிகளும் சிறிதும் கவரும்வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தில் கதையே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்களை இந்த அளவிற்கு புஷ்பா 2 படக்குழுவினர் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்பை பெற்ற பாடல் & சண்டை காட்சிகள்: படத்தில் அல்லு அர்ஜுனின் அறிமுகக்காட்சி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதேபோல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பின்னணி இசையும் படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் வித்தியாசமாக நடித்துள்ளதாகவும் இதேபோல அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் மோதும் காட்சிகளும் சிறப்பாக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். படத்தில் பீலிங்ஸ் பாடல் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளதாகவும் இதேபோல கிஸ்ஸிக் பாடலும் சிறப்பாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சியும் படத்திற்கு வலு சேர்த்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











