புயல் அடிச்சு பொழைச்சவன் இருக்கான்.. புஷ்பா 2 அடிக்கப்போற அடி எப்படி இருக்கும்.. ரன் டைம் இவ்வளவா?

சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 1000 கோடிக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 15 கோடி வரை ப்ரீமியர் ஷோ டிக்கெட் புக்கிங் நடைபெற்றதாக கூறுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் படத்தின் ரன் டைம் மேட்டர் தெரியுமா? என்பது தான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

2.30 மணி நேரம் வந்த கங்குவா படத்திலேயே 12 நிமிடக் காட்சிகளை ட்ரிம் பண்ணக் கூடிய நிலைமை சமீபத்தில் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக இந்தியன் 2, மெய்யழகன் உள்ளிட்ட படங்களின் நீளமும் குறைக்கப்பட்டன.

allu arjun pushpa 2 rashmika mandanna 2

இந்நிலையில், 3 மணி நேரத்துக்கும் அதிகளவில் அனிமல் படம் ரேஞ்சுக்கு புஷ்பா 2 ஓடப் போவதாக தகவல்கள் வெளியாகி அல்லு அர்ஜுன் ரசிகர்களையே அல்லு கிளம்ப வைத்துள்ளது.

புஷ்பா 2 ரிலீஸ் தேதி: வரும் டிசம்பர் 5ம் தேதியே புஷ்பா 2 திரைப்படம் வெளியாக காரணமே ஒரு நாள் முன்பாக ரிலீஸ் செய்து முதல் வார கலெக்‌ஷனை முடிந்த வரை அள்ளிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் தயாரிப்பாளர்கள் டிசம்பர் 6ம் தேதிக்கு பதிலாக 5ம் தேதி வெளியிடுகின்றனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் இந்த பாகத்திலும் பகத் ஃபாசில் தான் மெயின் வில்லனாக வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை சொதப்பல் காரணமாக சாம் சி.எஸ். இசையை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

ஏகப்பட்ட பஞ்சாயத்து: புஷ்பா 2 திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டாலும் அந்த படத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆரம்பத்தில் இருந்தே ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இடையே சண்டை வெடித்து பின்னர் சமாதானம் ஆகி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஸ்ரீலீலாவின் கிஸிக் பாடலும் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா கால் தூசுக்கு கூட வரலை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

allu arjun pushpa 2 rashmika mandanna 2

ரன் டைம் இத்தனை மணி நேரமா?: சமீப காலமாக பல படங்களுக்கு ரன் டைம் மிகப்பெரிய தலைவலியாக மாறி வருகிறது. 3 மணி நேரம் படமெடுத்தாலே அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டாய்ங்க என மீம் போடும் நேரத்தில் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் புஷ்பான்னா ஃபயர் இல்லை வைல்டு ஃபயர் என அல்லு அர்ஜுன் பண்ணப் போகும் அதீத பில்டப்புகளை எப்படித்தான் ரசிகர்கள் சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை எனக் கூறுகின்றனர். படம் வெளியான பின்னர், 20 நிமிடங்கள் கட் செய்வதை விட எடிட்டர் இப்போதே அந்த வேலை பார்த்தால் நல்லா இருக்கும் என்றும் தயாரிப்பாளர் தப்பிப்பார் என்றும் கூறுகின்றனர்.

அனிமல் தந்த வெற்றி: ஆனால், கடும் விமர்சனங்களையும் சினிமா பிரபலங்கள் பலரே இதெல்லாம் ஒரு படமா? பெண்களை இப்படியா கேவலப்படுத்துவது என விளாசித் தள்ளிய அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எடுத்துக் காட்டி பல விமர்சனங்களை கடந்து 900 கோடி வசூலை சாதித்துக் காட்டினார். அதே ரூட்டை சுகுமாரும் பிடித்திருக்கிறார். அதே அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பது டிசம்பர் 5ம் தேதி படம் வெளியானால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X