அடித்து தூள் கிளப்பிய அல்லு அர்ஜூன்.. புஷ்பா 2ன் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!

சென்னை: சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் அட்டகாசமான முதல் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தில். ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் லாரி டிரைவராக இருந்த அல்லு அர்ஜூன் அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி விட்டு செம்மர கடத்தல் மன்னனாகவே மாறிவிட்டார். முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனின் பாடி லாங்குவேஜ், பேச்சு, என சும்மா தரமாக இருந்தது. உலகம் முழுவதும் இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

Allu Arjun s Pushpa 2 The Rule first single out

புஷ்பா-தி ரூல் 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,காளி வேடமணிந்து, காதில் கம்பல், வளையல் புடவை என ஆக்ரோஷமான காளியாகவே மாறியிருந்தார் அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது.

தரமான ஆக்ஷன் காட்சிகள்: இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் சிண்டிகேட் தலைவரான பிறகு நடக்கும் அதிரடிகள் இடம்பெறும் என தெரிகிறது. முக்கியமாக அல்லு அர்ஜுன் - ஃபஹத் பாசில் இடையேயான மோதல்கள் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்களுடன், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.

Allu Arjun s Pushpa 2 The Rule first single out

முதல் சிங்கிள்: முதல் பாகத்தில் ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா மாமா, ஏய் சாமி… வாயா சாமி பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்த நிலையில், புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. புஷ்பா.. புஷ்பா…புஷ்பா ராஜ் என்ற பாடல் வெளியாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு விவேகா பாடல் எழுத, நாகேஷ் அஷிஷ், தீபக் ப்ளு ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். புஷ்பா முதல் பாகத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X