அல்லு அர்ஜுன் மிரட்டுறாரே.. வெளியானது புஷ்பா 2 ட்ரெய்லர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தள்ளிப்போயிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். அந்தத் திரையுலகில் அவர் ஃபேமஸாக இருந்தாலும் இந்திய அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்தப் படம் பான் இந்திய லெவலில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இதன் காரணமாக அவர் பான் இந்தியா ஸ்டாராக இப்போது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 க்ளிம்ப்ஸ்: முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு ஸ்வீட் செய்தியாக படமானது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது.
புஷ்பா 2 டீசர்: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து படத்திலிருந்து மொத்தம் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்கள்.
ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை ட்ரெய்லர் ரிலீஸாகியிருக்கிறது. ட்ரெய்லரில் அல்லு அர்ஜுன் மிக அருமையாக இருக்கிறார் என்றும்; கண்டிப்பாக புஷ்பா படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் என்றும் ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











