Pushpa 2: படப்பிடிப்புத் தளத்தில் ஆக்ரோஷமான இயக்குநர்.. புஷ்பா 2வில் என்னவெல்லாம் இருக்கோ?
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் புஷ்பா 2. இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை முதல் பாகத்தினை இயக்கிய சுகுமாறன் இயக்கியுள்ளார். அதேபோல் மைத்ரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்த ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்து படத்தினை தயாரித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு சம்பளம் மட்டும் ரூபாய் 300 கோடிகள் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும், படத்தின் பிஸ்னஸும் ரிலீஸ்க்கு முன் படம் ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் வியாபாரம் செய்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதாவது படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமம் சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் என இவற்றில் மட்டும் ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் படம் இப்போதே வியாபாரம் செய்துள்ளது. அதாவது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூபாய் 220 கோடிகளுக்கு திரையரங்க உரிமம் விற்பனை ஆகியுள்ளது.

அதேபோல் இந்தி மற்றும் வட இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு திரையரங்க ரிலீஸ் உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் ரூபாய் 50கோடிகளுக்கு திரையரங்க உரிமம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யபப்பட்டுள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ரூபாய் 30 கோடிகளுக்கும் கேரளாவில் ரூபாய் 20 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படத்தினை ரிலீஸ் செய்யும் உரிமம் ரூபாய் 140 கோடிகளுக்கு விற்பனை செய்யபட்டுள்ளது.

ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ்: இதன் அடிப்படையில் பார்க்கும்போது, ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் ரூபாய் 660 கோடிகள் திரையரங்க உரிமத்திலேயே வசூல் ஆகியுள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 275 கோடிகளுக்கு படத்தை வாங்கியுள்ளது. அதேபோல் சாட்டிலைட் சேனலுக்கு உரிமம் ரூபாய் 84 கோடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மியூசிக் ரைட்ஸில் ரூபாய் 67 கோடிகளுக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளது. மொத்தம் 1,086 கோடிகளுக்கு மேல் படம் ரிலீஸ்க்கு முன்னரே வியாபாரம் செய்துள்ளதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

ட்ரைலர்: படத்தின் மீதான எதிர்பார்ப்பை படக்குழு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, படக்குழு வெளியிட்டுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிஸ்க் பாடலும் ஃபீலிங்ஸ் பாடலின் வரிகளும் நடன அசைவுகளும் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றால் அது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்தான். அனைத்து மொழிகளிலும் புஷ்பா 2வின் ட்ரைலர் செம ஹிட் அடித்தது.

மேக்கிங்: இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தரப்பில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், படத்தின் இயக்குநர் சுகுமாறன் ஒவ்வொரு காட்சியிலும் அல்லு அர்ஜுனுக்கு சொல்லிக்கொடுக்கும் விதம் மிரட்டலாக உள்ளது. குறிப்பாக அவர் கோபப்படுவதைபோல் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ஸ் வர வைக்கின்றது.
அதேபோல் ஸ்டண்ட் காட்சிகளில் அல்லு அர்ஜுன் ரியாக்ஷன் வரை சுகுமாறன் சொல்லிக் கொடுக்கின்றார். அதேபோல், முழு வீடியோவையும் பார்க்கும்போது, செட்டில் இயக்குநர் சுகுமாறன், கவனமாகவும் கூர்மையாகவும் நடந்து கொள்வார் என்பது மட்டும் புரிகின்றது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











