கட்டுமஸ்தான உடல்…அல்லு சிரீஷின் லேட்டஸ்ட் கிளிக்… வாய் பிளந்த ரசிகைகள்!

சென்னை : அல்லு சிரீஷ் தனது கட்டுமஸ்தான உடலை காட்டும் மிரட்டலான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளன.

அல்லுஅர்ஜூனின் சகோதரரான இவர், பாலிவுட்டில் பிரபலன தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் பாடிய விலாதி ஷரப் என்ற வீடியோவில் நடித்துள்ளார்.

இதன்மூலம் வீடியோவில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரத்தை அல்லு சிரீஷ் பெற்றுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

ராதா மோகன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான கௌரவம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அல்லு சிரீஷ். நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புது புது முயற்சிகளை செய்து வருகிறார்.

தொகுத்து வழங்கியுள்ளார்

தொகுத்து வழங்கியுள்ளார்

தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார். டிக் டாக்கில் இணைந்த முதல் நடிகரும் இவர் தான். இவரை, ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றன.

100 மில்லியன் பார்வையாளர்கள்

100 மில்லியன் பார்வையாளர்கள்

அல்லு சிரிஷ் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார். 'விலாத்தி ஷராப்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வருகிறது.

கட்டுமஸ்தான உடல்

கட்டுமஸ்தான உடல்

நடிகர் அல்லு சிரீஸ் திரைப்படங்களைத் தவிர, உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒர்க் அவுட் செய்து முடிந்த கையோடு சட்டை இல்லாமல் , கறுப்பு நிற டிராக் பேண்ட் அணிந்து கொண்டு தனது கட்டுமஸ்தானை உடல் அப்பட்டமாக தெரியும் படி கண்ணாடியில் செஃபி எடுத்துள்ளார். இதில் அவரின் சிக்ஸ் பேக் அழகாக தெரிகின்றன. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வரும் நிலையில், ரசிகைகள் 'வாவ்' என்று கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Read more about: allu sirish
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X