Allu Sneha Reddy: ஆத்தி.. அல்லு அர்ஜுன் மனைவியே சிக்ஸ் பேக் வச்சிருக்காரு போல.. டாப்ஸை தூக்கி செம போஸ்!

ஹைதராபாத்: புருஷன்கள் ஹீரோயின்களுடன் நடிக்கும் போது அவங்களோட அழகிலும் ஸ்லிம் ஃபிட் லுக்கிலும் மயங்கிவிடக் கூடாது என்பதில் பெரும்பாலும் மனைவிமார்கள் கவனம் செலுத்துவதே கிடையாது என்கிற மாயையை உடைத்துள்ளார் அல்லு அர்ஜுன் ரெட்டியின் மனைவி சினேகா ரெட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர்கள் மட்டுமே 50 வயதானாலும் 70 வயதானாலும் நடிக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்கிற எந்தவொரு அவசியமும் இல்லை. குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு வீட்டிலேயே இருந்தால் உடல் பருமன் ஆவது இயல்பு தான் என நடிகர்களின் மனைவிமார்கள் சிந்திப்பதால் தான் சில ஹீரோக்கள் ஸ்லிம்மான ஹீரோயின்களை தேடிச் சென்று விடுகின்றனர் என்கின்றனர்.

Allu Sneha Reddy shows her abs at gym stuns Allu Arjun Fans
Photo Credit:

ஆனால், அப்படியெல்லாம் அல்லு அர்ஜுனை விட்டு விட மாட்டேன் என செம ஃபிட்டாக தனது உடலை வைத்திருக்கிறார் அல்லு சினேகா ரெட்டி. ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்த பின்னர் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

2 குழந்தைகள்: 2010ம் ஆண்டு அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் நிச்சயமும் செய்துக் கொண்டனர். 2011ம் ஆண்டு இருவரது திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த மார்ச் 6ம் தேதி அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி இருவரும் தங்களது 15ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அதே நாளில் தான் அல்லு சிரிஷ் திருமணமும் நடைபெற்றது.

Allu Sneha Reddy shows her abs at gym stuns Allu Arjun Fans
Photo Credit:

மனைவிக்கு கார் பரிசு: 15வது திருமண நாளை முன்னிட்டு அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டிக்கு Mercedes-AMG CLE 53 எனும் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்தார். மனைவிக்கு கார் பரிசளித்தால் அம்மா மனசு கோபக்கூடாதே என்பதற்காக மகளிர் தினத்தில் அம்மாவுக்கும் ஒரு சொகுசு காரை பரிசாக வழங்கி சரி செய்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

50 கோடி சொத்து மதிப்பு: அல்லு அர்ஜுன் சொத்துக்களை தவிர்த்து தனியாக சொந்த தொழில் நடத்தி வரும் அல்லு சினேகா ரெட்டியின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்கின்றனர். மேலும், 41 வயதான அல்லு சினேகா ரெட்டி இந்த வயதிலும் ஃபிட்டாக இருக்க ஜிம்முக்கு சென்று வருகிறார்.

சிக்ஸ் பேக் வச்சிருப்பாரு போல: நடிகைகள் சமந்தா, ஜோதிகா, த்ரிஷா எல்லாம் ஜிம்மில் எப்படி வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வருகிறார்களோ அதே போல சினேகா ரெட்டியும் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்து வருகிறார். அவர் தனது ஜிம் கோச்சுடன் கொடுத்த போஸில் தனது ஃபிட்டான வயிறு தெரிய வேண்டும் என்பதற்காக டாப்ஸை சற்றே தூக்கி வயிற்றுப் பகுதியை காட்டிய நிலையில், என்ன இவங்க சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிருப்பாங்க போலயே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 9.3 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X