‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு!

என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா படத்தில் அர்ஜூன், சரத்குமார் ஆகியோருக்கு தேசபக்தி பற்றி பாடம் நடத்துகிறார் அல்லு அர்ஜூன்

Recommended Video

'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' விமர்சனம் , பாக்ஸ் ஆபீஸ் வசூல்...வீடியோ

சென்னை: அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' படத்தில், தேச பக்தியை தமிழ் படங்களில் மாறி மாறிச் சொன்ன அர்ஜூனுக்கும், சரத்குமாருக்கும் தரப்பட்டுள்ள கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. இப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேசத்தைக் காக்கப் போராடும் ராணுவ வீரனாக அல்லு நடித்துள்ள இந்தப் படத்தில், தேச பக்தி என்றால் என்ன விலை எனக் கேட்கும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார்.

அர்ஜூன் படங்கள்:

அர்ஜூன் படங்கள்:

தமிழில் தேசப்பக்தி, தீவிரவாதிகளுக்கு எதிராக ஹீரோக்கள் போராடும் கதையம்சத்தைக் கொண்ட படங்களை கணக்கில் கொண்டால், பெரும்பாலும் அது விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன் நாயகனாக நடித்த படங்களாகத் தான் இருக்கும்.

ஜெய்ஹிந்த்:

ஜெய்ஹிந்த்:

அந்தளவிற்கு அவர்களது படங்களில் தேச பக்தியை காட்டியிருப்பார்கள். உதாரணத்திற்கு குடியரசு அல்லது சுதந்திர தின விழாக்களில் நிச்சயம் அர்ஜூனின் ‘தாயின் மணிக்கொடி' பாடல் இல்லாமல் இருக்காது.

ரொம்ப ஓவர்:

ரொம்ப ஓவர்:

அதேபோல், ஐ லவ் இந்தியா போன்ற தேசபக்தி பேசும் படங்களைக் கொடுத்தவர் சரத்குமார். அப்படிப்பட்ட சரத்குமாருக்கே, என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தில் தேசபக்தி வகுப்பெடுக்கிறார் அல்லு. இது தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், நமக்கு லேசாக உருத்துகிறது.

ஏமாற்றம்:

ஏமாற்றம்:

ஆக்‌ஷன் கிங் பேரெடுத்த அர்ஜூனின் கால்களைக் கட்டிப் போட்டு விட்டு, அவரை டயலாக்காக படம் முழுக்க பேச வைத்துள்ளார் வம்சி. இதுவும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

வச்சி செஞ்சிருக்கார்:

வச்சி செஞ்சிருக்கார்:

ஒவ்வொரு படத்திலும் பக்கம் பக்கமாக தேச பக்தி பேசிய இவர்கள், எப்படி இந்தப் படத்தில் நேர் எதிரான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள் என்பது படம் பார்ப்பவர்கள் மனதில் எழும் சந்தேகம்.

எத்தனை நாள் கனவோ தன் படத்தில் அர்ஜூனையும், சரத்குமாரையும் வச்சி செஞ்சிருக்கார் அல்லு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X