பட வாய்ப்புக்கு படுக்கை: புது குண்டை தூக்கிப் போட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி

By Siva

Recommended Video

பட வாய்ப்புக்கு படுக்கை: புது குண்டை தூக்கிப் போட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி- வீடியோ

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் பற்றி புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நடிகை அபூர்வா, சமூக ஆர்வலர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இயக்குனர்களுமே படுக்கைக்கு வருமாறு நடிகைகளை அழைத்துள்ளனர். தங்களின் மானம் மற்றும் கெரியர் போய்விடும் என்பதால் பயந்து கொண்டு பல நடிகைகள் அதை வெளியே சொல்வது இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாகுபாடு

பாகுபாடு

சினிமா துறையில் சம்பளம் கொடுப்பதிலும் கூட பாகுபாடு உள்ளது. ஒரு நடிகருக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுத்தால் நடிகைக்கு ரூ. 1 கோடி அல்லது அதற்கும் குறைவாகவே தருகிறார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

நடிகைகள்

நடிகைகள்

பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். ஏதாவது ஏடாகூட விஷயம் நடந்தால் நடிகர்கள் அமைதியாக இருக்கும் நிலை மாற வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுஜாதா கூறியுள்ளார்.

தைரியம்

தைரியம்

அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் தெரிவித்தால் அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கிறார்கள். உடனே அந்த நடிகையை அனைவரும் குறி வைக்கிறார்கள். அவர் பிரச்சனை பார்ட்டி, திமிர் பிடித்தவர் என்று கூறி ஒதுக்கிவிடுகிறார்கள் என்கிறார் நடிகை அபூர்வா.

பூனம்

பூனம்

ஸ்ரீ ரெட்டி துணிச்சலாக போராடி வரும் நிலையில் நடிகை பூனம் கவுர் ஒரு தெலுங்கு பட இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். என்ன அவர் ஸ்ரீ ரெட்டி போன்று தைரியமாக பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X