பிரபல நடிகர் என்னை பலாத்காரம் செய்தார்: பெண் இயக்குனர் பகீர் தகவல்

By Siva

Recommended Video

பிரபல நடிகர் என்னை பலாத்காரம் செய்தார்: பெண் இயக்குனர் பரபரப்பு புகார்- வீடியோ

மும்பை: பிரபல நடிகர் ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், எழுத்தாளருமான வின்டா நந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் படங்களில் அப்பா கதாபாத்திரம் என்றாலே ஆலோக் நாத்தை தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அப்பா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் அவர்.

இந்நிலையில் ஆலோக் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார் பெண் இயக்குனர் வின்டா நந்தா. இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மது

மது

என் நெருங்கிய தோழியின் கணவர் அவர். நான் அவர்கள் வீட்டிற்கு செல்வேன், அவர்களும் என் வீட்டிற்கு வருவார்கள். நாங்கள் அனைவரும் நாடக பின்னணி கொண்டவர்கள். நான் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான தாரா சீரியலை தயாரித்து, எழுதினேன். அந்த நபர் என் கதையின் ஹீரோயின் மீது கண் வைத்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு அவரை பிடிக்கவில்லை.

நடிகை

நடிகை

அந்த நடிகர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர், வெட்கம் கெட்டவர். ஆனால் தசாப்தத்தின் சிறந்த தொலைக்காட்சி நடிகர் அவர் தான். அதனால் அவர் செய்த மோசமான காரியங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் தாரா சீரியலின் ஹீரோயினுக்கு அவர் தொல்லை கொடுத்தார். இருப்பினும் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து அவரை சீரியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தோம்.

 தகராறு

தகராறு

கடைசி ஷாட் எடுக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு அவரை வெளியே அனுப்ப முடிவு செய்தோம். இதை தெரிந்து கொண்ட அவர் குடித்துவிட்டு செட்டுக்கு வந்தார். செட்டில் உட்கார்ந்து குடித்தார். அவரின் காட்சி வந்தபோது எங்கள் சீரியல் ஹீரோயின் மீது விழுந்தார். அந்த பெண் அவரை ஓங்கி அறைந்துவிட்டார். அதன் பிறகு அந்த நடிகரை கிளம்பச் சொல்லிவிட்டோம்.

 மனைவி

மனைவி

ஒரு பார்ட்டிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவரின் மனைவியான என் நெருங்கிய தோழி ஊரில் இல்லை. ஆனால் தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள் அடிக்கடி சந்திப்பதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்கு சென்ற இடத்தில் என் மதுவில் ஏதோ கலந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இரவு 2 மணிக்கு அந்த வீட்டில் இருந்து கிளம்பினேன். என்னை யாருமே டிராப் செய்யவில்லை. அது எனக்கு வித்தியாசமாக இருந்தது.

 பலாத்காரம்

பலாத்காரம்

இரவு நேரத்தில் ஆள் இல்லாத தெருவில் நடந்தபோது ஒருவர் தன் காரில் வந்து என்னை வீட்டில் டிராப் செய்வதாக கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்கு சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என் வீட்டில் வைத்தே என்னை கஷ்டப்படுத்தியிருக்கிறார். என்னால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை.

ஆதரவு

எனக்கு நண்பர்களின் ஆதரவு இருந்ததால் மீண்டு வந்துவிட்டேன். இந்த நிமிடத்திற்காக தான் 19 ஆண்டுகளாக காத்திருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் தைரியமாக வந்து அவர்களின் பெயர்களை வெளியிடுங்கள். இன்னும் மறைக்க வேண்டாம் என்று வின்டா தெரிவித்துள்ளார். அவர் அந்த நடிகரின் பெயரை தெரிவிக்காமல் குறிப்பு மட்டுமே கொடுத்துள்ளார். அந்த குறிப்புகளை பார்த்ததுமே அது ஆலோக்நாத் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.

More from Filmibeat

Read more about: mumbai மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X