உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அல்போன்சா முன் ஜாமீன் மனு

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தையுடன் வசித்தார். அதேவீட்டில் வினோத்குமார் என்ற இளைஞரும் அவருடன் சேர்ந்து வசித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த நிலையில், வினோத்குமார் திடீரென மர்மமான முறையில் அல்போன்சா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அல்போன்சா தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் வினோத்குமாரை கொலை செய்து விட்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார். அல்போன்சாவும் அவருடைய தம்பி ராபர்ட்டும், வினோத்குமாரை அடித்து கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர் வினோத் குமார் குடும்பத்தினர். இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி வருகிறார் வினோத்குமாரின் தந்தை.
இது தொடர்பாக அல்போன்சாவிடமும் நேரில் விசாரித்தனர் போலீசார். அவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் வந்ததால், அல்போன்சாவும், ராபர்ட்டும் சென்னை முதன்மை கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் இவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கைது பயத்தில் குழந்தையுடன் அல்போன்சா தலைமறைவானார்.
இந்நிலையில் அல்போன்சா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் அல்போன்சாவின் வக்கீல்.
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நாளை இம்மனு விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











