அல்போன்சாவை சும்மா விடமாட்டேன்! - வினோத்குமார் தந்தை பாண்டியன் ஆவேசம்

By Shankar

சென்னை: என் மீது பொய்யான புகார் கூறும் நடிகை அல்போன்சாவை சும்மா விடமாட்டேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார்.

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத்குமார் கடந்த மாதம் 4-ந்தேதி அல்போன்சாவின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து அல்போன்சாவுக்கும் வினோத்குமார் குடும்பத்தினருக்கும் கடும் மோதல் எழுந்துள்ளது.

தினசரி ஒருவரையொருவர் தாக்கி புகார் கூறி வருகின்றனர்.

நடிகை அல்போன்சா கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வினோத்குமாரின் தந்தை பாண்டியன் என்னை கொன்றுவிட்டு மகனை கடத்திச் சென்று விடுவேன் என மிரட்டுவதாக பரபரப்பான குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கு பாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நடிகை அல்போன்சா முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை எரித்து விட்டதாகவும், குழந்தையை கடத்த முயன்றதாகவும் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இவற்றுக்கெல்லாம் அவரிடம் ஆதாரம் இருக்கிறதா?

என் மகன் தற்கொலை செய்த அன்று அவனது காரை முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று நாங்கள் எடுத்து சென்றோம். அந்த காரில் இருந்த பாஸ்போர்ட்டைத்தான் நாங்கள் எரித்து விட்டதாக அல்போன்சா கூறுகிறார். காரில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது போலீசுக்கு தெரியும்.

விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் முன்னிலையில் காரில் இருந்த பொருட்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. அதன் பின்னரே கார் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தடயவியல் சோதனைக்காக காத்திருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். அதன் அறிக்கை கிடைத்த பின்னர் எனது மகனின் தற்கொலை வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ரூ.50 லட்சம் கேட்டு வினோத்குமாரை நான் துன்புறுத்தியதாகவும் அல்போன்சா கூறியுள்ளார். பெற்றபிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள். சங்கு என்ற படத்தை தயாரிப்பதாக கூறி அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும்தான் வினோத்குமதாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அல்போன்சாவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அவரை சும்மா விடப் போவதில்லை. பொய் புகார் கொடுத்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

வினோத்குமாரின் தந்தை பாண்டியன் மீது அவதூறு பரப்பிவரும் அல்போன்சா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்று பாண்டியனின் வக்கீல் ஆவேசப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X