சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள பிரபல மலையாள இயக்குனர்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார்.

ஹைதராபாத்தில் தீவிர பாதுகாப்புடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் சமீபத்தில் ரஜினி நடித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

தள்ளிப்போன ரிலிஸ்

தள்ளிப்போன ரிலிஸ்

2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து இது வரை வெளிவராமல் உள்ளது. படக்குழு 2021ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.

நடித்து முடித்தார்

நடித்து முடித்தார்

இதையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பகுதிகளை நடித்து முடித்துவிட்டு கடந்த வாரம் தமிழகம் திரும்பினார்.

பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர்

2015ஆம் ஆண்டு நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியாகிய மலையாள படமான "பிரேமம்" படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது ஃபகத் பாசில் நடிப்பில் "பாட்டு" எனும் படத்தை இயக்கி வருகிறார்.

முயற்சி செய்தேன்

முயற்சி செய்தேன்

இந்நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் பயனர் ஒருவர் ரஜினியை வைத்து படமெடுப்பது குறித்த கேள்விக்கு, பிரேமம் படம் முடித்த உடன் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தேன் எனவும் ஆனால் இதுவரை சந்திக்க இயலவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது உள்ள சூழலை கருத்திற்கொண்டு பின்னர் சந்திக்க முயற்சிகவுள்ளதாக கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X