AlphonsePuthiran: "பிரேமம் பட இயக்குநருக்கு இப்படியொரு பிரச்சினையா?” சினிமாவில் இருந்து விலக முடிவு!

சென்னை: மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரன்.

குறும்படங்கள், ஆல்பம் சாங்ஸ் மூலம் பிரபலமான அவர், நேரம் திரைப்படம் வழியாக இயக்குநராகவும் அறிமுகமானார்.

 Alphonse Puthiran: Premam director Alphonse Puthren decided to quit cinema due to autism

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம், மெகா ஹிட் அடித்தது.

தற்போது இளையராஜா இசையில் 'கிஃப்ட்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகும் அல்போன்ஸ் புத்திரன்
மலையாளத்தில் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் மூலம் பிரபலமான அல்போன்ஸ், நேரம் திரைப்படத்தில் இயக்குநரானார். நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர், சார்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் வெளியான இந்தப் படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான பிரேமம், அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், மலையாளத்தில் புதிய ட்ரெண்ட் செட்டை கிரியேட் செய்தது. சென்னையிலேயே 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது. அதேபோல், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

2015ம் ஆண்டு வெளியான பிரேமம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டால், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிக்க டாப் ஹீரோக்கள் ரெடியாக இருந்தனர். அவருக்கு அல்டிமேட் ஸ்டார் அஜித்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் இருந்தது. அதேபோல் அல்போன்ஸ் புத்திரனுக்கு கோலிவுட் மஸ் ஹீரோ அஜித் படத்தை இயக்க ஆசை இருந்தது. இதனிடையே கடைசியாக பிருத்விராஜ், நயன் நடித்த கோல்டு படத்தை இயக்கியிருந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கோல்டு, நெகட்டிவான விமர்சனங்களுடன் தோல்வியடைந்தது. இதனையடுத்து தற்போது இளையராஜா இசையில் 'கிஃப்ட்' என்ற படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படம் பற்றிய அப்டேட் போஸ்டருடன் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றியும் அவர் மனம் திறந்துள்ளார்.

அதாவது, "நான் எனது சினிமா கேரியரை நிறுத்திவிட்டேன். எனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது தற்போது தான் தெரியவந்தது. இதனால் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. குறும்படங்கள், ஆல்பம் இயக்குவதில் ஆர்வம் காட்டுவேன். திரைப்படம் இயக்க முடியவில்லை என்றாலும், ஓடிடி படைப்புகளில் கவனம் செலுத்துவேன். எனக்கு சினிமாவில் இருந்து விலக விருப்பம் கிடையாது. ஆனாலும் வேறு வழியே இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

அல்போன்ஸ் புத்திரனின் இந்த முடிவு சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தெரிவித்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X