உங்களைப் பார்த்தும் 4 பேர் மலரே மலரேன்னு பாடனுமா.. இங்க வாங்களேன்!

By Siva

சென்னை: புதுமை ஏதும் இல்லாத மூனாவது திரைப்படம் ஆரம்பிக்க போறேன் என பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேரம் படம் மூலம் இயக்குனர் ஆனவர் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் புத்ரன். யாருப்பா இந்த அல்போன்ஸ் என்று முதல் படத்திலேயே அனைவரையும் பேச வைத்தார்.

அதன் பிறகு அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் பற்றி நாங்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. இந்நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

புதுப்படம்

புதுப்படம்

புதுமை ஏதும் இல்லாத மூனாவது திரைப்படம் ஆரம்பிக்க போறேன். இந்த வாட்டி படத்தில நடிக்க பாட்டு பாடவும் நடிக்கவும் தெரிஞ்ச ஒரு பொண்ணு தேடுகிறோம். கர்நாடக இசை தெரிஞ்சா சந்தோஷம். ஏன்னா எங்களுக்கு தெரியாது. வயசு: 16-26

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள் 2 பேரை தேடுகிறோம். 1 பையன், 1 பொண்ணு. உண்மையா இருக்கணும், தமிழ் கண்டிப்பா தெரியணும்..இப்போ நான் எழுதியிருக்கிற தமிழும், இங்கிலீஷும் புரியற ஆளா இருக்கணும்...அவ்ளோ தான் நாங்க தேடுற தகுதி.

படம்

படம்

என் படத்தில நடிக்கிறதும் ஒர்க் பண்றதும் யார் யார் என்று நான் அப்றமா சொல்றேன். படம் தமிழ் படம் தான். மெயில் ஐடி: [email protected]

சாப்ட்வேர்

சாப்ட்வேர்

குறிப்பு: போட்டோ அனுப்புனா மட்டும்..பாட்டு பாடுறது தெரியாது...நியாபகம் வச்சுக்கோங்க. போட்டோஷாப்புக்கு பதிலா பிட்ச் கரக்ஷனும் ரிவர்பெல்லாம் போடாதீங்க..நாங்க சினிமால இருக்கோம்...எங்களுக்கும் சாப்ட்வேர் தெரியும் என தெரிவித்துள்ளார் அல்போன்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X