நயன்தாரா நடிப்பில் தமிழிலும் வெளியாகும் கோல்டு… ஒருவழியாக முடிவுக்கு வந்த ரிலீஸ் பஞ்சாயத்து

திருவனந்தபுரம்: ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்துள்ளனர்.

பிரேமம் படத்திற்குப் பின்னர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகை தினத்தில் வெளியாகவிருந்த கோல்டு ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்திருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கோல்டு

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கோல்டு

நிவின் பாலி, நஸ்ரியா நசீம் நடிப்பில் வெளியான நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே மாஸ் காட்டிய ஆல்போன்ஸ் அடுத்து பிரேமம் படத்தை இயக்கினார். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சென்னையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி பிரமிக்க வைத்தது. இதனால் ஆல்போன்ஸ் புத்திரன் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கோல்டு ரிலீஸ் தேதி

கோல்டு ரிலீஸ் தேதி

பிரேமம் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆல்போன்ஸ் புத்திரனின் கோல்டு படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிருத்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. பிருத்விராஜ் ஜோஷி என்ற கேரக்டரிலும் நயன்தாரா சுமங்கலி உன்னிகிருஷ்ணன் பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படமும் பிரேமம் மாதிரி வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோல்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், மலையாளத்தில் கோல்டு

தமிழ், மலையாளத்தில் கோல்டு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த கோல்டு திரைப்படம், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதி கோல்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முக்கியமாக இந்தப் படம் மலையாளம் உட்பட தமிழிலும் வெளியாகிறது. படக்குழுவின் இந்த அறிவிப்பு, கோலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸ் தேதியுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரும் வைரலாகி வருகிறது.

கோல்டு முடிந்தது, பாட்டு எப்போது?

கோல்டு முடிந்தது, பாட்டு எப்போது?

நேரம், பிரேமம் படங்களைப் போன்றே, கோல்டு திரைப்படமும் ஆல்போன்ஸ் புத்திரனின் வித்தியாசமான மேக்கிங்காக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல்டு படத்துக்கு முன்னதாக ஃபஹத் பாசில், நயன்தாரா, இலியானா நடிப்பில் 'பாட்டு' என்ற படத்தை தொடங்கினார் ஆல்போன்ஸ் புத்திரன். ஆனால், அந்தப் படம் டேக் ஆஃப் ஆகும் முன்னர் கோல்டு ஷூட்டிங்கை தொடங்கிய ஆல்போன்ஸ், இப்போது ரிலீஸுக்கும் தேதி முடிவு செய்துவிட்டார். இதனால், விரைவில் 'பாட்டு' படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X