twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா இசைப்பள்ளி, கமல் நடிப்பு பள்ளி துவக்கனும்...கேட்குறது யார் தெரியுமா?

    |

    சென்னை : கோலிவுட்டை பொருத்தவரை இசைன்னா இளையராஜா, நடிப்புன்னா கமல்ஹாசன் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இளையராஜாவிற்கு சமீபத்தில் தான் ராஜ்யசபாவில் நியமன எம்.பி., பதவி வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது. இளையராஜாவும் தமிழில் பதவியேற்று அனைவரையும் கவர்ந்தார்.இளையராஜா எனும் நான் என அவர் பதவியேற்றுக் கொண்ட வீடியோக்கள் இணையத்தில் செம டிரெண்டானது.

    கமலும் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார். இந்த சமயத்தில் கோலிவுட்டில் இதுவரை யாருக்கும் தோனாத வகையில் பிரபல டைரக்டர் ஒருவர் வித்தியாசமாக தனது ஆசையை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

    தமிழில் அறிமுகமான டைரக்டர்

    தமிழில் அறிமுகமான டைரக்டர்

    தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவான 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, அடிக்கடி தனது எண்ணங்களையும் கேள்விகளையும் அதில் தெரியப்படுத்தி வருகிறார்.

    நயன்தாராவுடன் 2 படங்களா

    நயன்தாராவுடன் 2 படங்களா

    நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தனது இரண்டாவது படமாக 'பிரேமம்' படத்தை இயக்கி புகழ்பெற்றார். இவர் தற்போது இரண்டு மலையாள படங்களை இயக்கி வருகிறார். ப்ருவித்ராஜ், நயன்தாரா நடிக்கும் கோல்ட் மற்றும் ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு படங்களை இயக்கி வருகிறார்.

    பிரேமம் டைரக்டரின் வித்தியாசமான ஆசை

    பிரேமம் டைரக்டரின் வித்தியாசமான ஆசை

    இந்த சமயத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஒரு இசைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றும், கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியை துவங்க வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் சமீபத்தில் கமல், ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தி இருந்தார்.

    இவருக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோணுது

    இவருக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோணுது

    அல்போன்ஸ் புத்திரன் தனது ட்வீட்டில், இளையராஜா ஒரு இசைப் பள்ளியை துவக்க வேண்டும். இளையராஜாவின் இசைப் பள்ளியில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, அனிருத் ஆகியோருடன் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    கமலையும் விட்டு வைக்கல

    கமலையும் விட்டு வைக்கல

    அதோடு நடிகர் கமல் ஹாசன் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கி, நடிப்பில், இயக்கத்தில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் 45 நிமிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் அப்படி நடிப்பு பயிற்சி பள்ளியை துவங்கினால், இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், பாசில், பிரியதர்ஷன், எஸ்.எஸ்.ராஜமெளலி, சந்தான பாரதி ஆகியோர் விசிட்டிங் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    யப்பா...இது வேற லெவல் ஆசைப்பா

    யப்பா...இது வேற லெவல் ஆசைப்பா

    அதோடு, கமல் ஹாசன் நினைத்தால் கிறிஸ்டோபர் நோலனை விசிட்டிங் பேராசிரியராக நியமித்து, திரைப்பட இயக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்கலாம் என்றும், ஒருநாள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கூறிய அனைவரும் தங்களது படங்களின் மூலம் தனக்கு விர்ச்சுவல் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

    English summary
    Director Alphonse Puthren now revealed that he wishes for legendary music composer Isaignani Ilaiyaraaja to start a music school. He also said that Kamal to starts acting school and he teaches acting for students 45 minutes per day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X