twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப வல்கர்.. ராணுவ வீரர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது.. டிரெண்டாகும் #ALTBalaji_Insults_Army

    |

    மும்பை: வெப்சீரிஸ்களுக்கு தனியாக தணிக்கை இல்லாததால், ஒவ்வொரு வெப்சீரிஸ்களும் அந்த சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தி காசு பார்த்து வருகின்றனர்.

    ALT Balaji தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அனைத்து வெப்சீரிஸ்களும் ரொம்ப வல்கராகவும், ஆபாசமாகவும் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

    இந்நிலையில், தற்போது நாட்டை காக்கும் ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக வெளியான XXX சீசன் 2 வெப்சீரிஸுக்கு எதிராக #ALTBalaji_Insults_Army என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும் சீன்ஸ்!காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும் சீன்ஸ்!

    உடலுறவு காட்சிகள்

    உடலுறவு காட்சிகள்

    தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த லாக்டவுனில் அனைவரது கவனத்தையும் வெப்சீரிஸ்கள் ஈர்த்து வருகின்றன. சென்சார் ஏதும் இல்லாத காரணத்தால், ஆபாச வசனங்களும், நிர்வாண காட்சிகளும், தேவையற்ற உடலுறவு காட்சிகளுமாக வெப்சீரிஸ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும், மத ரீதியான பிரச்சனைகளும் கிளப்பப்பட்டு வருகின்றன.

    ரொம்ப வல்கர்

    ரொம்ப வல்கர்

    சமீபத்தில் அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் வெளியான பதால் லோக் வெப்சீரிஸில் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், தற்போது ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, இறந்த ராணுவ வீரரின் மனைவி, தனது கணவரின் சீருடையை கள்ளக் காதலனுக்கு போட்டு செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருப்பதை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

    சீருடையை கிழித்து

    சீருடையை கிழித்து

    தேசத்திற்காக தங்களின் உயிரையே தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக XXX சீசன் 2 எனும் வெப்சீரிஸை ஆல்ட் பாலாஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருப்பதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்து வருகிறது. அதிலும், ராணுவ உடையை கிழித்து உடலுறவு கொள்ளும் காட்சி பலரையும் கொந்தளிக்க செய்திருக்கிறது.

    ஆன்ட்டி ஆர்மி வெப்சீரிஸ்

    ஆன்ட்டி ஆர்மி வெப்சீரிஸ்

    XXX சீசன் 2வில் அப்படியென்றால், கோர்ட் மார்ஷியல் எனும் மற்றொரு வெப்சீரிஸில் இந்து அதிகாரி, தலித்துக்கு எதிரானவராகவும், பெண்களை சீரழிக்கும் காமக் கொடூரனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வெப்சீரிஸான ‘CODE M' வெப்சீரிஸில் ராணுவ அதிகாரிகளை ஓரினச்சேர்க்கையாளர்களாக சித்தரித்துள்ளனர். இதுபோன்ற ஆன்ட்டி ஆர்மி வெப்சீரிஸ்களை தயாரித்தவர்களுக்கும், இயக்கியவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    பிக்பாஸ் 13வது சீசன் போட்டியாளர் இந்துஸ்தானி பாவ், ஆல்ட் பாலாஜி தயாரிப்பு நிறுவனர் ஏக்தா கபூர் மற்றும் சோபா கபூர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்களை ஆல்ட் பாலாஜி தயாரிப்பாளர்கள் இழிவு படுத்தியுள்ளதாக தனது யூடியூப் பக்கத்திலும் இந்துஸ்தானி பாவ் வெளுத்து வாங்கி உள்ளார்.

    Recommended Video

    Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?
    எதை வேண்டுமானாலும் செய்யலாமா

    எதை வேண்டுமானாலும் செய்யலாமா

    மீடியா சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளும், ஆபாச வசனங்களும், ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் எதிரான காட்சிகளை படமாக ஆக்கலாமா? என்ற கேள்வியை இந்த ஹாஷ்டேக்கில் பலரும் முன் வைத்து வருகின்றனர். மேலும், அரசு இந்த விவாகரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற வெப்சீரிஸ்களுக்கு தடை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    Netizens slammed ALT Balaji productions webseries which contains sexual content and recently one of its webseries insulted Indian Army.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X