Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்பா மயில்சாமியிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம் மகனுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ்
சென்னை: யாருக்கும் அறிவுரை கூறுவது எனக்கு பிடிக்காது. அன்பு மயில்சாமி அவரின் தந்தையிடம் இருந்து அவர் நிறைய கற்று கொள்ளலாம் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். அல்டி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி பேசினார் மயில்சாமி அண்ணனின் நடிப்பும் நகைச்சுவையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் அல்டி. என்னடா பட தலைப்பு இப்படி இருக்குனு பாக்குறீங்களா. அல்டிமேட் சுருக்கம் தான் அல்டி என்கிறார்கள்.
அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அன்பு மயில்சாமியின் பிறந்த நாளன்று அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தியதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.
மேலும் அவர் பேசுகையில், மயில்சாமி அண்ணனின் நடிப்பும் நகைச்சுவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அவர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும், அதில் அவரின் தனித்துவம் இருக்கும்.
பிகில் ஃபீவர் பிகின்ஸ் - ப்ரியா அட்லீ புரமோசன்
மிகவும் வித்தியாசமாகவும் தெளிவாகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொள்ளலாம். நானும் நிறைய கற்றுகொண்டுள்ளேன். என்னுடைய சிறு வயதில் நான் மயில்சாமி அண்ணனின் மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற கேசெட்டை அடிக்கடி கேட்டுள்ளேன்.
யாருக்கும் அறிவுரை கூறுவது எனக்கு பிடிக்காது. அதனால் ஒரு ஆலோசனையாக அன்பு மயில்சாமிக்கு கூறுவது என்னவென்றால், அவரின் தந்தையிடம் இருந்து அவர் நிறைய கற்று கொள்ளலாம் என்றார் விஜய் சேதுபதி.
மேலும், அவர் அப்படத்தின் கதாநாயகியான மனிஷா ஜித் தமிழில் இந்த விழாவில் பேசியதற்கு நன்றி என்றும் அந்த கதாநாயகியையும் பாராட்டி பேசினார்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!