twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா இப்போ சிரமத்தில் இருக்கு-அல்டி விழாவில் பேசிய ராதாரவி

    |

    சென்னை: தமிழ் சினிமா இப்போ சிரமத்தில் இருக்கிறது என்று அல்டி திரைப்படத்தின் இசை மற்றம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார். மேலும், அன்பு மயில்சாமிக்கு உங்கள் தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும் என்று வழக்கம் போல் நகைச்சுவையாகவும், சிந்திக்கும்படியாகவும் பேசி அனைவரையும் மகிழ வைத்தார் டத்தோ ராதாரவி.

    எம்.ஜே.ஹுசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் அல்டி. அல்டிமேட் சுருக்கம் தான் அல்டி என்று படக்குழுவினர் அல்டிக்கு விளக்கமளித்தனர்.

    Alti Trailer and Audio release-Radha Ravi speech

    அல்டி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய டத்தோ ராதாரவி, சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன்.

    சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன்.

    சிறு படங்களை குறைந்த பட்சம், 5 நாட்களாவது திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா இசையில் வாஸ்கோட காமா பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பேன். அன்பு மயில்சாமிக்கு உங்கள் தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும் என்று வழக்கம் போல் நகைச்சுவையாகவும், சிந்திக்கும்படியாகவும் பேசி அனைவரையும் மகிழ வைத்தார் டத்தோ ராதாரவி.

    இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, தாவணி கனவுகள் படத்தில் தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்தில் 7 டேக் வாங்கி தான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன். அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் அப்பா மயில்சாமி மாதிரி நல்ல குணங்களோடு இருக்க வேண்டும்.

    ட்ரைலர் பார்க்கும்போது புதுமுக இயக்குநர் மாதிரி தெரியவில்லை. யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கியிருக்கிறார். அல்டி என்றால் அல்டிமேட்டின் சுருக்கம் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டேன் என்றார்.

    ஜாகுவார் தங்கம் பேசும்போது, விஜய் சேதுபதி கூறியதுபோல அன்பு மயில்சாமி நடந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேணடும். கதாநாயகி தமிழ் பெண்ணாக இருப்பதில் மகிழ்ச்சி. கண்டக்டர் பொண்ண யார் கட்டிக்குவாங்க என்ற பாடல் வரிகள் அனைவரிடத்திலும் வெற்றியடையும். எம்.ஜி.ஆர். போல அனைவரையும் வாழ்த்தும் போது ஆத்மார்த்தமாக வாழ்த்தும் விஜய் சேதுபதிக்கு நன்றி என்றார்.

    நடிகர் மயில்சாமி பேசும்போது, இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி. எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன்.

    பத்து படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவனுக்கு முதல் இசை வெளியீட்டு விழா. ஜாகுவார் தங்கம் கூறியதுபோல், விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று. ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை. யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். தான் என்று பேசினார்.

    நடிகை மனிஷா ஜீத் பேசும்போது, முதல் பார்வை முதல் இன்று வரை அவருடைய ஆதரவை எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு நன்றி என்றார்.

    நடிகர் அன்பு மயில்சாமி பேசும்போது, இப்படத்தின் பாடல்களை முதன்முறை கேட்கும்போதே எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக்கு ராபர்ட் நன்றாக நடனம் அமைத்திருக்கிறார் என்றார்.

    இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, இப்படத்தின் இயக்குநருக்கு இது முதல் படம். நன்றாக இயக்கியிருக்கிறார். ராபர்ட் மூலம் தான் இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் கதாநாயகி எனது குடும்பத்தில் ஒருவர். கார்த்திக் மற்றும் கவிதா இருவரும் புதுமுக பாடலாசிரியர்கள். இப்படத்திற்காக பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

    தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகமாக இருந்தாலும் இப்படத்திற்காக நன்றாக பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவை சிறு வயது முதல் தெரியும். என்னைப் போல் சாப்பாட்டு பிரியர். இருவரும் இணைந்தே சாப்பிட செல்வோம். அதேபோல் ராபர்ட்டும் எனக்கு நெருக்கமானவர் என்றார்.

    இயக்குநர் உசேன் பேசும்போது, இரண்டு மாதங்களில் படம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

    தயாரிப்பாளர் ரஹ்மத்துல்லா பேசும்போது, நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். அல்டி படம் மூலம் திரைத்துறையில் பயணிக்க வந்துள்ளோம் என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

    English summary
    Radha Ravi spoke at the launch of the music and trailer of the movie 'Alti' that, Tamil cinema is in trouble now. Also, advised to Hero Anbu Mayilsamy , like his father Mayilasamy, should be protected by friendship and have good qualities, as usual, jokingly and thoughtfully entertained everyone, said Radha Ravi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X