ஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. பப்புக்குட்டிக்கு குட்டி பப்புக்குட்டியாம்.. சஞ்சீவ் ஜாலி!

சென்னை: ஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அவரது கணவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Alya Manasa Blessed with Girl Baby | Sanjeeve Alya Manasa

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் பெரும் பிரபலமானார்.

அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார் ஆல்யா மானசா.

போட்டோக்கள்

போட்டோக்கள்

அண்மையில் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற அவருக்கு தொலைக்காட்சி சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார் ஆல்யா மானசா. அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்தது

இந்நிலையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆல்யா மானசா. அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஆல்யா மானசாவின் கணவரான நடிகர் சஞ்சீவ், ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குட்டி பப்புக்குட்டி

குட்டி பப்புக்குட்டி

இதுதொடர்பாக ஆல்யா கர்ப்பமாக இருக்கும் போது தான் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள சஞ்சீவ், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். உங்களுடைய ஆசிர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை. அம்மாவும் மகளும் நலமாக இருக்கிறார்கள் என்றும் பப்புக்குட்டிக்கு குட்டி பப்புக்குட்டி.. இப்படிக்கு சஞ்சீவ் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

சஞ்சீவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில்தான் ஆல்யா மானசாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியனை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X