சின்னத்திரை ஜோடி.. ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தைக்கு பேரு வச்சிட்டாங்கப்பா என்ன பேரு தெரியுமா?
சென்னை: சின்னத்திரை நட்சத்திர ஜோடியான ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதி தங்களின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் பெரும் பிரபலமானவர்கள் நடிகை ஆல்யா மானசா நடிகர் சஞ்சீவ்.

அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார் ஆல்யா மானசா.
கடந்த 21ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை ஆல்யாவின் கணவர் சஞ்சிவ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி தங்களின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆல்யா. குழந்தையுடன் இருக்கும் போட்டோவுடன், தாய்மையை அனுபவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் எங்களின் மகளின் பெயர் அய்லா சையத் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











