ஜாலியோ ஜிம்கானா.. குடும்பத்துடன் துபாய் பறந்த ஆல்யா மானசா குடும்பம்!
சென்னை: சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தனது குடும்பத்துடன் துபாயில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அங்கு உச்சகட்ட மகிழ்ச்சியில் குதூகலித்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் இவரின் கதாபாத்திரம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்துப்போனதால், இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.

ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்த நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் இருவரும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.
சீரியலில் படுபிஸி: ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த போதே, இரண்டாவதாக ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அந்த தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறகு கொழு கொழுவென்று இருந்த ஆலியா மானசா 50 நாளில் 16 கிலோ வரை எடையை குறைத்து சும்மா சிக்குனு மாறி இருக்கிறார்.

சன் தொலைக்காட்சி சீரியல்: இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் டிவியில் இருந்து விலகி, சன் டிவியில் புதிய தொடரில் நடித்து வருகிறார். இனியா என்ற சன் டிவி தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வரும் ஆல்யா. இந்தத் தொடரில் பெண் அடிமைத்தனத்தை வீட்டில் நடைமுறைப்படுத்தும் தன்னுடைய மாமனாரை திருத்தும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் தன்னுடைய கணவர் விக்ரமாக நடித்துவரும் நடிகர் ரிஷியுடன் இணைந்து ஆல்யா மானசா மிகவும் நெருக்கமாகவும் நடித்து வருகிறார். இந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சீரியலில் ரொமான்ஸ்: அந்த சீரியலில் வரும் ரொமான்ஸ் காட்சியை பார்த்துவிட்டு தனது கணவர் சஞ்சீவ் எப்படி ரியாக்ட் செய்தார் என்பதை பேட்டியொன்றில் ஆல்யா மானசா தெரிவித்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகளில் தான் நடித்தால், சிரியலில் என்ன இப்படி செய்துக் கொண்டிருக்கிறாய் என்று அவர் கேள்வி எழுப்புவார் என்றும், அப்படியே ஒரு லுக் விடுவார் என்றும் ஆலயா மானசா தெரிவித்துள்ளார். மேலும் மற்ற கணவர்கள் போலத்தான் சஞ்சீவும் தன்மீது மிகவும் பொசசிவ் அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.

குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக க்யூட்டான கபிளாக இருக்கும் இவர்கள் தற்போது ஆங்கில புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் துபாய்க்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்.இப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, கணவருடன் ரீல்ஸ் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளிவருகிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல குவிந்து வருகிறது. நடிகை ஆலியா மானசா இன்ஸ்டாகிராமில் நான்கு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











