சித்தார்த்தை போல் காதலிக்கு பரிசளித்த சஞ்சீவ்
Recommended Video
சென்னை: ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் காதல் கதை, ரோஜா, ஆர்கே செல்வமணி காதல் கதை போல டிவி உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் செய்து வைத்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வப்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். கல்யாணத்திற்கு முன்பே களேபரப்படுத்தி வரும் ஜோடி இது.

மானசா பிறந்த நாள்
மே 27 மானசாவின் பிறந்தநாளை இருவரும் நட்சத்திர ஓட்டலில் சிறப்பாக கொண்டாடி உள்ளனர். காதலியின் பிறந்தநாளை யொட்டி சஞ்சீவ் அவருக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ஆச்சரியப் பரிசு
முன்னதாகவே ஆல்யாவிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்போவதாக சஞ்சீவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது என்ன சர்ப்ரைஸ் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.

ஹோட்டலில்
ஒரு ஹோட்டல் அறை முழுவதும் பலூன் நிரப்பி, அதில் 24 பரிசு பொருட்கள் வைத்து அங்கு ஆல்யா மானசாவை அழைத்து சென்றுள்ளார். மானசாவிற்கு 24 வயது நிறைவடைந்ததை ஒட்டி, 24 பரிசுகளை அளித்து அவரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சஞ்சீவ்.

பாடல் பின்னணியில்
சித்தார்த் - பிரியா ஆனந்த் நடித்த 180 படத்தில் இடம் பெற்றுள்ள ‘'நீ கூறினால்'' பாடலில் வருவது போல காதலியை பரிசு மழையில் நனைய வைத்துள்ளார் சஞ்சீவ். (பிண்ணனியில் இந்த பாடல் தான் ஓடுகிறது).

வீடியோ
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மானசா. ஆலியா மானஸாவின் பிறந்த நாளுக்கு சஞ்சீவ் கொடுத்த பரிசுகளையும் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிகர்கள் பிரம்மித்து போயுள்ளனர்.

கொடுத்து வச்சிருக்கணும்
சஞ்சீவின் செயலால் வாய் பிளக்கும் ரசிகர்கள், இது போன்ற காதலர் கிடைக்க ஆலியா மானசா கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படித்தான் ஒரு காலத்தில் ரோஜாவும், ஆர்.கே. செல்வமணியும் பார்த்துப் பார்த்து காதலித்து வந்தனர்.

டிவி உலக காதல்
அந்த காதலுக்குப் பிறகு சினிமாவில் அதிகம் பேசப்பட்டது சூர்யா ஜோதிகா காதல்தான் இப்போது டிவி உலகில் மானசா - சஞ்சீவ் காதல்தான் கொடி கட்டிப் பறக்கிறது.


Click it and Unblock the Notifications











